பிணியிலே (நோயிலே) கொடுமையான பிணி எதுவென்றால் பசிப்பிணி தான் என்கிறார் அவர் ,
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

நட்சத்திர அந்தஸ்த்து பெற்ற இந்த ஹோட்டலின் கிளைகள் கோவையில் பல இடங்களிலும், மற்றும் உலகின் பல நாடுகளிலும் உள்ளது. அதில் கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டர் மில்ல்ஸ் பஸ் ஸ்டாப்பிற்கு அடுத்து அமைந்துள்ள கிளையில் ஒரு விசேஷம், அது என்னவென்றால் இங்கு சாப்பிட வருபவர்கள் பப்பே சிஸ்டம் என்ற வகையில் தாங்களே தங்களுக்கு தேவையான உணவுவகைகளை அதற்க்கான இடத்தில் சென்று வாங்கிக்கொண்டு மேசையில் அமர்ந்து சாப்பிடலாம். உணவருந்தி முடிக்கும் போது ஊழியர் ஒருவர் ஒரு கார்டை கொண்டுவந்து தருவார், அதை திறந்து பார்த்தல் அதனுள்ளே இருப்பவர்களிடம் பெற்றுக்கொண்டு இல்லாதோர்க்கு உணவளிக்கிறோம். தங்களால் இயன்றதை அளியுங்கள் இல்லாதொர்க்காக என்று எழுதி இருக்கும், நம்மால் இயன்றதை அந்த கார்டினுள்ளே வைத்து விட்டு வரலாம்,.
இப்படி ஒரு உணவகமா என்று நான் முதல் முறை சென்ற போது அசந்து விட்டேன், இதே உணவகத்தின் ரேஸ் கோர்ஸ் கிளையில் சாப்பாடு ஒன்று ரூபாய் 350 /- அனால் இந்த கடையில் நம்மால் முடிந்ததை கொடுத்தால் போதும், எனக்கெதிரில் அமர்ந்து சாப்பிட்டவர் மூன்று பேர் சாப்பிட்டு விட்டு ரூபாய் 2000 /- வைத்துவிட்டு போனார்,
அதை வைத்து குறைந்தது நூறு பெரிக்கவது உணவளிக்கலாம் அல்லவா,
அடைத்தான் இவர்கள் சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறார்கள்,
முதலாளி இல்லாத இடம்தானே என்று ஊழியர்களோருவரும் அலட்சியமாக நடப்பதில்லை, அந்த கடையில் உணவின் தரமோ, சுவையோ, சுகதரமோ எதுவும் குறை சொல்ல முடியாது, பலதரப்பட்ட மக்களும் வந்து உணவருந்தி செல்கின்றனர்,
இத்தனைக்கும் இப்படி ஒரு வசதி இருப்பது கோவையிலேயே பலபேருக்கு தெரிவதில்லை, இப்படி ஒரு விஷயத்தை வலைப்பூவில் உங்களுடன் பகிர்ந்து கொள்வது பெருமையாக உள்ளது. கோவை வரும்போது இந்த உணவகத்தில் தவறாமல் உணவருந்தி உங்கள் கருத்தையும் வெளியிடுங்கள், பல பெருமைகள் கொண்ட கொங்கு மண்ணிற்கு பெருமை சேர்க்கும் ஒரு விஷயம் ஹோட்டல் அன்னலட்சுமி
ஏமாற்றத்தை தவிர்க்க பிரதி திங்கள் உணவகம் விடுமுறை
அனைவருக்கும் வணக்கம். தொடரும்......
தவறாமல் கருத்துரை இடுங்கள் நான் ஒளிர .....
11 comments:
அருமையான அன்னலட்சுமி பற்றிய பரிமாறலுக்கு நன்றி.
வணக்கம் கார்த்தி என்பதிவிர்க்கு வந்து கருத்திட்டதற்க்கு நன்றி.
அன்னபூர்ணவை பற்றி அழகாக விளக்கியுள்ளிரீகள்.
நம்ம ஏரியா....வாங்க ..வாங்க ...
மேட்டுபாளையம் ரோடு வெள்ளகிணறு டெக்ஸ்மோ கம்பெனி அருகில் ஸ்ரீ வத்ஸ கார்டன் அருகே ஒரு கிளை உள்ளது .நான் சென்று இருக்கின்றேன்.
boss, so u too in kovai, we have to meet, i call u when i am free on thursday!
ஷர்புதீன் said...
boss, so u too in kovai, we have to meet, i call u when i am free on thursday
//OK//
பல பெருமைகள் கொண்ட கொங்கு மண்ணிற்கு பெருமை சேர்க்கும் ஒரு விஷயம் ஹோட்டல் அன்னலட்சுமி
இராஜராஜேஸ்வரி said...
பல பெருமைகள் கொண்ட கொங்கு மண்ணிற்கு பெருமை சேர்க்கும் ஒரு விஷயம் ஹோட்டல் அன்னலட்சுமி
கருத்துக்கு நன்றி
Annalakshmi is also here in Perth, Australia. But i never know that it is in coimbatore which is my native place.
Thanks much for the information!!!.
நன்றி கார்த்தி நானும் அன்னலட்சுமியைப் பற்றி தெரிந்துகொண்டேன்.
அன்னலட்சுமி ஆற்றும் பணி மிகவும் பாராட்டிற்குரியவை. அங்கு பணியாற்றுபவர்கள் சிலர், உணவு பரிமாறுவது நமக்கு அவர் செய்யும் நன்மை என்றும், தாங்கள் உயர்ந்தோர் என்று காட்டிக்கொண்டும் இருக்கிறார்கள். இங்கு நான் பார்த்ததுண்டு. என்னால் முடிந்ததை நான் குடுத்துவிட்டு செல்கிறேன். அது கம்மியான தொகையாயிருந்தால் நிச்சயம் எளக்காரமான பார்வை வருவதுண்டு. அதை நாம் கண்டுக்கொள்ளாமல் இருக்க முடியாது. எதுக்கும் கொஞ்சம் கவனமாகவே நாம் இருப்போம். சரியான இடங்களுக்கே சேவை செய்வோம்.
Post a Comment