Showing posts with label நவ கிரஹ. Show all posts
Showing posts with label நவ கிரஹ. Show all posts

Friday, November 14, 2014

கேது பகவான்


   
http://suyamvarammatrimony.com/nava_images2/kethu_bhagavan.png
நவகிரகங்களில் ஒன்பதாமவரான கேதுவிற்கு கதிரப்பகை , சிகி,செம்பாம்பு என்ற பிற பெயர்களும் உள்ளன.
கேது பகவான் ட்டித்தொழில், அயல் நாட்டில் பிழைப்பு, கடின உழைப்பு,வைத்தியம், கெட்ட சினேகம், இந்திரிய நாட்டம், மயக்கம்,குன்மம், குட்டம், சயம், வலி ,சுரம், தோல் வியாதி, விஷக்கடி , மாந்திரிகை வித்தை, கைது ஆகும் ஆணை, ஆணை ரத்துஆதல் , சாதிவிட்டு நீக்குதல், ஞானம்,மோட்சம், ஆகியவைகளுக்கு காரகனாய் உள்ளனர். கேதுவின் அருள் பெற விநாயகரை வழிபட வேண்டும்

   http://www.thenkalahasti.com/images/ketu.jpg நவரத்தினங்களில் வைடூரியம் இவருக்குரியது. கேதுவின் மனைவி பெயர் சித்ரலேகா. இராசி மண்டலத்தில் இவர் அப்பிரதட்சணமாக சுற்றுவர்.
கேதுவிற்கு கரும்புச் சாறால் அபிஷேகம் செய்வித்து, செவ்வாடை , வை
டூரியம், செந்தாமரை,செவ்வரளி,வெட்டிவேர் ஆகியவற்றால் அலங்காரம் செய்து கேதுமந்திரங்களை ஓதி, தர்ப்பைபுல்லால் யாகத்தீயைஎழுப்பி ,கொள்ளு , கொள்ளுப்பருப்புப்பொடி அன்னம் ஆகியவற்றால் ஆகுதி செய்து , அர்ச்சனைசெய்து, புளியஞ்சாதம் நைவேத்தியம் படைத்து,தூப, தீபம் காட்டி பிராத்தனை செய்தால் கேது தோஷம் நீங்கும்.
கேதுத் தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றிப் பாபம் தீர்ப்பாய் வாதம், வம்பு, வழக்கு களின்றி கேதுத் தேவே கேண்மையாய் ரஷி

Make Money at : http://bit.ly/adflywin

கேதுத் தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றிப் பாபம் தீர்ப்பாய் வாதம், வம்பு, வழக்கு களின்றி கேதுத் தேவே கேண்மையாய் ரஷி

Make Money at : http://bit.ly/adflywin
 கேதுத் தேவே கீர்த்தித் திருவே பாதம் போற்றி!! பாபம் தீர்ப்பாய் வாதம், வம்பு, வழக்கு களின்றி கேதுத் தேவே கேண்மையாய் ரஷி !!

Make Money at : http://bit.ly/adflyw

Saturday, September 13, 2014

நாடி வந்தோருக்கு நற்கதியளிக்கும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி மற்றும் ராகு


திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற சிவாலயம். சேக்கிழார் திருப்பணி செய்த தலம்.


பாதாள லோகத்திலிருந்து நாகராஜன் வந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால் ஆலயத்தின் மூலவர் நாகநாதசுவாமி என்றழைக்கப்படுகிறார். நாகராஜன் இத்தல சிவபெருமானை வழிபட்டதன் பின்ன்னியில் ஒரு சுவாரஸ்யமான வரலாறு அடங்கி இருக்கிறது.           சுசீலர் என்ற முனிவரின் மகன் சுகர்மன். ஒரு சமயம் அவன் வனத்தின் வழியே சென்று கொண்டிருந்தபோது, நாக அரசனான தக்ககன் என்ற பாம்பு அவனைத் தீண்டியது.    இதையறிந்த முனிவர்கோபம் கொண்டார். தன் மகனைத் தீண்டிய தக்ககன் மானிடனாகப் பிறக்க சாபமிட்டார். சித்தம் கலங்கிய தக்ககன்  , சாபவிமோச்சனம் பெற, காஷ்யப முனிவரை அணுகி ஆலோசனை கேட்டான்.

  பூலோகத்தில் லிங்கப்பிரதிஷ்டை செய்து, சிவ பூஜை செய்து வழிபட்டால் சாபம் நீங்கும் என காஷ்யப முனிவர் அருளினார்.  அவர் சொல் ஏற்று பூலோகம் சென்று, சிவலிங்க பூஜை செய்தான் தக்ககன். சிந்தை குளிர்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சிதந்து சாபவிமோசனம் அருளினார்.
ஆலயத்தின் பிரதான வாயிலான கிழக்கு கோபுரம் ஐந்து நிலைகளையுடைது. நூற்றுக்கால் மண்டபம் அமைந்துள்ள சூரிய தீர்த்தத்தின் கரையில் மழுப்பொருத்த விநாயகர் சந்நதி உள்ளது. இத்தலத்தின் தென்பிரகாத்த்தில் தல விநாயகர் சந்நதி உள்ளது. இவருக்குசான்று விநாயகர்என்று பெயர். நாகராஜன் சிவனை வழிபட்டதற்கு சான்றாக விளங்கியதால் இவர் சான்று விநாயகர் என்று பெயர் பெற்றிருக்கிறார். இவருக்கு நாகராஜ கணபதி என்ற பெயரும் உண்டு. இரண்டாம் பிரகாரத்தில் நாகராஜ உருவம் உள்ளது. கருவறையில் தக்ககன் வழிபட்ட நாகநாதர் மிக எளிமையாக காட்சி அருள்கிறார்.
சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்த பிருங்கிமுனிவரைக் கண்டு வெகுண்ட பார்வதி தேவி, இறைவனைக் குறித்து அர்த்தாநாரீஸ்வர வடிவம் வேண்டி இத்தலத்தில் சண்பக மரத்தடியில் கடுந்தவம் புரிந்தார். பார்வதியின் தவத்தால் மகிழ்ந்த இறைவன் , அவருக்குத் தன் உடலில் பாதியை வழங்கி உமையொருபாகனானார். எனவே இத்தலத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவில் சிவபார்வதி காட்சியளிக்கின்றனர்.

தவம் செய்த அன்னை பிறையணியம்பாள் ஆலயத்தில் ஒரு தனிச் சந்நிதியில் எழுந்தருளியிருக்கிறாள். அம்மையும் அப்பனும் தவிர இக்கொயிலில் ஒரே சந்நித்யில் கிரிகுஜலாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரும் காட்சி தருகின்றனர்.
பிருங்கி முனிவருக்காக முப்பெரும் தேவியராக காட்சியளித்த்தின் அடிப்படையில் மூவரும் ஒரே சந்நிதியில் அமையப் பெற்றிருக்கின்றனர். மார்கழியில் மூன்று தேவியருக்கும் புனுகு சார்த்துகின்றனர். அப்போது 45 நாட்கள் இந்த தேவியரை தரிசிக்க இயலாது.அந்நாட்களில் சன்னதி முன்புள்ள திரைச் சீலைக்கே பூஜை நடக்கிறது. தை கடைசியில் வெள்ளியன்று சன்னதி முன்மண்டபத்தில் அன்னம், காய்கறி, பழங்கள் ஆகியவை படைக்கப்படுகின்றன.

இங்கு முப்பெரும் தேவியரை வணங்கி இவர்களை வழிபட குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை.  கிரிகுஜாம்பிகை சன்னதியில் விநாயகரும் , அருகில் ராகுபகவான் யோகராகு என்றபெயரிலும் இருக்கின்றனர். கேதுவிற்கு அதிபதி விநாயகர். இந்த விநாயகரையும், யோகராகுவையும், வணங்கினால் ராகு, கேது தோஷம் நிவர்த்தியாவதாக நம்பிக்கை .
நாகத்திற்கு சிவன் அருள் செய்த தலம் என்பதாலேயே சிவபக்த கிரகமாகிய ராகு, இத்தலத்தில் சிவனை வழிபட தேவியருடன் வந்தார். தினமும் சிவதரிசனம் பெற வேண்டி இங்கேயே மனையாள்களுடன் தங்கிவிட்டார். பிற்காலத்தில் இங்கு ராகுவிற்கு தனிச்சன்னதி எழுப்பப்பட்டது.நாகவள்ளி, நாக்கன்னி என்ற இருவரையும் சேர்த்துஇருவருக்கான தனிச்சன்னதி இத்தலத்தின் தென்மேற்கு மூலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
நாகநாத சுவாமி கோயிலில் தனது தேவியர்களுடன் மங்கல ராகுவாக எழுந்தருளியிருந்து தம்மை வழிபடுவோர்க்கு பல நன்னைகளையும் இவர் அருளுவது சிறப்பான ஒன்றாகும்.பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால் இக்கோயிலில் மனித வடிவில் காட்சியளிக்கிறார்.ராகுவை இந்தக் கோலத்தில் காண்பது அபூர்வம்.
இத்தலத்தில்  ,இவருக்கச்  செய்கின்ற பாலாபிஷேகத்தின் போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும்போது  பாலின் நிறம் நீலமாகிவிடுகின்ற அதிசயம் அகிலத்தில் எங்கும் காணக் கிடைக்காத தனித்தன்மை பெற்ற ஒரு விஷயமாகும்.
1986 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது  தனது சட்டையை மாலையாக ராகுபகவானுக்கு அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது.  அந்த இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக கண்ணாடிப் போழைக்குள் வைக்கப்பட்டுள்ளது.
நாகராஜனுக்கும் துர்க்கைக்கும் அர்ச்சனை செய்வதாலும் கோமேதக மணியை அணிந்து கொள்வதாலும் உளுந்து தானியத்தைத் தானம் செய்வதாலும் ராகுகிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.
இத்தலத்தில் உள்ள ராகு பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை,வெள்ளிக்கிழமைகளில்  விரதமிருந்து ராகுகாலத்தில் பாலாபிஷேகம் செய்வதாலும், கருமை, நீலத் துணிகளைச் சாத்தி, நீல நிற மலர்களாலும் அர்ச்சித்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டு, எள்ளு சாதம் நிவேதன்ம் செய்ய தோஷங்கள்நீங்கும்.

திருத்தலக் குறிப்புகள்
தலத்தின் பெயர் :   ஸ்ரீ நாகநாதசுவாமி, ராகு
எங்கே உள்ளது :  தமிழ்நாட்டில், கும்பகோணத்தில்
எப்படிச்செல்வது : சென்னையிலிருந்தும், கோவையிலிருந்தும்  கும்பகோணத்திற்கு ரயில்,
பேருந்து மற்றும் கார் மூலம் செல்லலாம். 
கும்பகோணத்திலிருந்துபேருந்து, கார் மற்றும்
ஆட்டோ மூலம் திருநாகேஸ்வரம் சென்றடையலாம்.
  எங்கே தங்குவது :   கும்பகோணத்தில் தங்கும் விடுதிகளும்,   உணவுவிடுதிகளும் உள்ளன.
தரிசன நேரம்:
காலை 6.00 முதல் பகல் 12.45 வரை
மாலை 4.00 முதல்இரவு 8.30 வரை
கோயில் முகவரி:
நிர்வாக அதிகாரி, நாகநாதசுவாமி திருக்கோயில்,
திருநாகேஸ்வரம் 612204,தஞ்சை மாவட்டம்,
தொலைபேசி : 0435246 3354.