Tuesday, October 29, 2019

குழந்தை சுர்ஜித் RIP

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை காப்பாற்ற முடியவில்லை..

ஒரு குழந்தை வீட்ல இருந்தா அது பத்து பேருக்கு வேலை வைக்கும். அதே குழந்தைக்கு நூறு விதத்தில ஆபத்தும் இருக்கும். அதுக்கு கைக்கு எட்டுகிற இடத்தில் வில்லங்கமான பொருட்களை வைக்கக் கூடாது, தண்ணி தொட்டிகிட்ட போகவிடக்கூடான்னு ஏகப்பட்ட சமாச்சாரம் இருக்கு. அதை அப்புறம் பார்ப்போம்.

இங்கே, ஒரு பக்கம் ஆழ்துளை கிணறு விஞ்ஞானிகள், இன்னொரு புறம் அரசின் நடவடிக்கைகளை புரட்டியெடுக்கும் பயில்வான்கள் கம் மீடியாக்கள். எல்லாவற்றையும்விட நெஞ்சை நக்குவதில் இமயத்திற்கே சவால்விடும் இரக்க உள்ளங்கள்..

இந்த கோஷ்டிகளை பத்தி நாம என்னைக்குமே கவலைப்பட்டதில்லை.. தாலுகா வாரியா, போர் போடறவங்களோட அஸோசியேஷனை கூப்பிட்டு செம கண்டிப்பு காமிச்சாலே போதும்.. அவங்க கிட்ட இல்லாத விவரமா? அதை டிரேஸ் பண்ணி மூடுற வேலைய பார்த்தாலே மேற்கொண்டு எந்த எழவும் வராது.

இதுல பிரச்சினை என்னன்னா,  நம்மில் எத்தனை பேருக்கு, அலட்சியத்தால் பிறர் மரணத்திற்கு  காரணமாக இருத்தல் என்பது பற்றிய சிந்தனை இருக்கிறது என்பதுதான்.

இன்னைக்கும் நம்மை சுற்றி பல இடங்கள் டைம் பாம் தான்.. மூடிபோட்டு மூடப்படாத கழிவுநீர் கால்வாய், கண்டுபிடிக்க முடியாத வேகத்தடைகள், சாலைப் பள்ளங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம்..

எல்லாவற்றையும்விட படிச்சிருந்தும் விசாரிச்சோ, இல்லை அலசி ஆராய்ந்தோ இல்லாம எவ்வளவு அலட்சியமா எல்லா கருமாந்திரங்களையும் ஷேர் பண்ணி ஏழரையை வைக்கிறாங்க..

செத்துப்போன சுர்ஜித்துக்கு பதிலா இன்னொருத்தன் வீட்டு குழந்தை படத்தை போட்டு ஆர்ஐபி அலம்பல் பண்ணிகிட்டு இருக்காங்க...
நன்றி ஏழுமலை வெங்கடேசன் 

Tuesday, October 22, 2019

Flex board making




Life lessons


"ஒளிபெறுவதற்காக முயற்சிக்காதீர்கள்; ஒளியாக மாறிவிடுங்கள்; மாற்றமடைவதற்குரிய நிகழ்வு  உங்களுக்கு மிகமிக எளிதுதான்; ஏனெனில், நீங்கள்தான் கணத்திற்க்கணம் மாற்றம் அடைந்துக்கொண்டு இருகிறீர்களே; ஆனாலொன்று, ஒளி எப்போதும் மாற்றமடைவதில்லை; நீங்கள்தான் ஒளிக்கான மாற்றத்தை உங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்"
−−− #ஶ்ரீவித்யாநந்தா