முழு
முதற் கடவுளான கணபததிக்குச் சிறப்புகள் பல உண்டு.
Wednesday, February 26, 2014
Tuesday, September 10, 2013
3, மெய்பொருள் நாயனார்
மெய்பொருள் நாயனார் திருக்கோவிலூர் என்று இப்போது அழைக்கப்படும் திருக்கோவலூரில் மலாடர் குடியில் வந்த ஒரு குருநில மன்னர், இவர் சிவச்சின்னத்தையே மெய்பொருள் என்று கருதியதால். இவரை மக்கள் மெய்பொருள் நாயனார் என அழைத்தனர், முத்தநாதன் என்ற எதிரி நாட்டு மன்னன், மெய்பொருள் நாயனார் நாட்டின் மீது பலமுறை போர் தொடுத்தும் இவரை வெல்ல முடியாது, வஞ்சகமாக பகை முடிக்க காத்திருந்தான். ஒருமுறை சிவனடியார்
வேடமேற்று உபதேசமளிப்பதாக கூறி மெய்பொருள் நாயனார் அரண்மனைக்குள் புகுந்தான், மன்னரை (மெய்பொருள் நாயனார் ) மறைத்து வைத்திருந்த தனது தனது வாளாள் வெட்டினான், இது கண்ட அரசனின் மெய்காப்பாளன் தத்தன், முத்தநாதனை கொல்லப்பாய்ந்தான் அவனை தன் உயிர் பிரியும் தருவாயிலும் தடுத்து நிறுத்திய மெய்பொருள் நாயனார், முத்தனாதன் வஞ்சனையோடு வந்திருந்தாலும் சிவனடியார் வேடமேற்று வாந்த்தினால் அவரை மன்னித்து அனுப்ப ஆணையிட்டு மெய்பொருள் நாயனார் சிவனருள் பெற்றார்மெய்பொருள் நாயனார் பற்றி விரிவாக படிக்க சொடுக்கவும்
மெய்ப்பொருள் நாயனார்
Monday, September 09, 2013
2.இளையான்குடி மாறநாயனார்
இளையான்குடி மாறநாயனார் இளையான்குடி என்ற ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர்.தினமும் சிவனடியார்களுக்கு உணவளித்த பின்பே தான் உணவுண்ணும் பழக்கமுடையவர். செல்வ செழிப்பான அவர் சிவனடியார்களுக்கு உணவளிக்கும் பண்பை தவறாது கடைபிடித்து வந்தார். வறுமை நிலையிலும் தனது வழமை தவறாது கடைபிடிப்பவர் என்பதை உலகிற்கு உணர்த்த விரும்பிய சிவபெருமான், ஒரு நாள் நள்ளிரவில் நல்ல மழை நேரத்தில் சிவனடியார் வேடத்தில் பசி என்றனத்தி மாறனார் இல்லம் வந்தார். வீட்டிலோ உணவேதும் இல்லை, சற்றும் மனம் கலங்காத மாறனார், கூடையெடுத்து தன் தலையில் கவிழ்த்துக்கொண்டு அன்று பகலில் தனது வயலில் விதைத்த விதை நெல்லை எடுத்துவர கிளம்பினார், வயலில் இருந்து சேகரித்து வந்த விதை நெல்லை தனது மனைவியிடம் தந்து சிவனடியார்க்கு அமுது படைக்க கொடுத்தார், தனது வீட்டு உத்தரத்தில் இருந்த மரத்தை உடைத்தெடுத்து விறகாக பயன்படுத்தி அவருடைய மனைவியார், சாதமும், கீரையும் தயார் செய்தார். உண்ணவந்த சிவனடியாரை காணாது திகைத்த மாறநாயனாருக்கு சிவபெருமான் ஜோதிப்பிழம்பாய் காட்சி தந்து அடியாக்கு உணவளித்த அடியாரே நீ உன் இல்லாலுடன் சிவலோகமடைந்து பேரிண்பமடைவாயாக என திருவருள் புரிந்தார்.
இளையான்குடி மாறநாயனார் பற்றி விரிவாக
படிக்க சொடுக்கவும்
Sunday, September 08, 2013
1. திருநீலகண்ட நாயனார்
திருநீலகண்ட நாயனார் மண் ஓடு செய்து சிவனடியார்களுக்கு வழங்கும் தொண்டு செய்து வந்தார்.புலனின்ப நாட்டத்தால் பிற மாதரிடம் சென்ற அவரிடம் அவரது மனைவி திருநீலகண்டத்தின் மீது ஆணையாக எம்மை தீண்டக்கூடாது என்றார். எம்மை என்று பொதுவாக கூறியதால் மாதர் ஒருவரையும் மனதாலும் தீண்டேன் என்று சிவபெருமான் மீது திருநீலகண்டர் ஆணையிட்டர்.
ஒருசமயம், சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமான் திருவோடு ஒன்றை கொடுத்து, புனித யாத்திரை செல்வதாகவும், சில காலம் கழித்து வந்து பெற்றுக்கொள்வதாகவும் கூறி அவரிடம் கொடுத்து சென்றார்.
ஆண்டவன் திருவிளையாடலால் அது மறைந்த்து. பல வருடங்களுக்கு பிறகு அதே சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமான் அந்த திருவேட்டை தருமாறு கேட்டார், திருநீலகண்டரோ அது திடீரென்று காணாது போய்விட்டதாக கூறினார்.. திருவோடு உண்மையிலேயே காணாமல்தான் என்று ஊரரிய மனைவியின் கரம் பற்றி கோவில் குளத்தில் மூழ்கி சத்தியம் செய்ய சொன்னார் சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமான் . ஊரரிய தனது சபதத்தை பற்றி சொன்ன திருநீலகண்ட நாயனார், சிறு மூங்கிலின் இரு முனையை பற்றி தாங்கள் இருவரும் மூழ்கியெழுவதாக சொன்னார், அதுபோலவே திருநீலகண்ட நாயனார் அவரது மனைவியுடன் மூழ்கியெழுந்தார், ஈசனருளால் தங்கள் முதுமைகோலம் இளமையுடன் எழுந்த இவர்கள்
தங்கள் இழந்த வாழ்வை வாழ்ந்து சிவமயத்துடன் இணைந்தனர்.
Saturday, September 07, 2013
மஹாவீர் சக்ரா கேப்டன் மகேந்திரநாத் முல்லா
100 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய
இங்கிலாந்தின் டைட்டானிக் கப்பல் பற்றி நமக்கு தெரியும்.
ஆனால், 1971, டிசம்பர் 9 அன்று இந்திய பாகிஸ்தான்
போரில் 19 பேருடன் மூழ்கிய நம் இந்திய கப்பற்படை கப்பல் பற்றி எத்தனை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன ?
இந்திய கப்பற்படையின் INS
Khukri என்ற போர்கப்பல் இந்திய
பாகிஸ்தான் போரின்போது அரபிக்கடலில் , குஜராத்தின் டையூ
(Diu) பிரந்தியத்தில் ரோந்து பணியில் இருந்த்து.
அது இரவு நேரம், அப்போது அங்கு வந்த பாகிஸ்தானின் டாப்னே வகை
(Daphne Class) ஹாங்கர் (Hangor) என்ற நீர் மூழ்கிகப்பல்,INS குக்ரி போர் கப்பலை குண்டு
வீசித்தாக்கியது.
எதிரியின் குண்டு வீச்சால் தாக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் INS குக்ரி கடலில் மூழ்க
ஆரம்பித்த்து, கடற்படை அதிகாரிகள் 18 பேரும் வீரர்கள் 178 பேரும் கப்பலுடன் கடலில்
மூழ்கி
இறந்தனர், கடலில் குதித்து உயிர்பிழைத்தவர்கள் 67 பேரே.
INS குக்ரியின் தலைவர் கேப்டன் மகேந்திரநாத் முல்லா,
கப்பலிலிருந்து குதித்து தப்பிக்க உதவும் சாதனத்தை (Life Jacket) தனது இளநிலை அதிகாரிகளுக்கு
கொடுத்து விட்டு தப்பி செல்ல உத்தரவிட்டார், மேலும் தன்னால் முடிந்தவரை வீரர்கள்
கடலில் குதித்து தப்பிக்க உதவினார்,
இந்த சம்பவத்தில் உயிர் தப்பிய கமான்டர் மனுசர்மா
கூறியதாவது "என்னையும் எனது சக அதிகாரி லெப் டினென்ட் குன்டன்மாலையும் பார்த்த கேப்டன் முல்லா ''குதியுங்கள் உடனே "" என்று கத்தினார். எங்களது தயக்கத்தை புரிந்துகொண்டு ''என்னைபற்றி கவலைப்படாதீர்கள்'' என்று உரத்த குரலில் கூறிக்கொண்டே எங்களை கடலில் தள்ளிவிட்டார்.
நாங்கள் இருவரும்
கடலில் சிறிது தூரம்
நீந்தினோம், இருட்டில் ஒருவரை ஒருவர் விட்டு விலகி விட்டோம், உடன் வந்தவரைத்தேடி
கப்பலை நோக்கி திரும்பிப்பார்த்தேன், அப்போது எங்கள் கப்பல் எனக்கு மிக அருகிலேயே
மூழ்கிகொண்டிருந்த்து, கப்பலின் மேல்தளத்தில் பக்கவாட்டு கம்பியின்மேல் சாய்ந்து சிகரெட் புகைத்தபடி கம்பீரமாக நின்று கொண்டிருந்தார் கேப்டன் முல்லா.
என் கண்ணெதிரிலேயே எங்கள் கப்பலும் என்ஜின் அறையிலிருந்து வெயியே வரமுடியாமல் சிக்கிய அதிகாரிகளும் , வீரர்களும், அந்த சந்தர்ப்பத்திலும் அவர்களை விட்டு பிரியாத கேப்டன் மகேந்திரநாத் முல்லாவும் ஜலசமாதி ஆயினர்.
கேப்டன்கள் ஒருபோதும் தங்கள் கப்பலை கைவிடமாட்டார்கள் என்பது கடற்படையின் எழுதப்படாத விதி. அதை நடைமுறையில் நிருபித்துக்காட்டியவர் கேப்டன் முல்லா.
அன்று மரணமடைந்த வீர்ர்களுக்காக டையூ நகரில் ஒரு நினைவகம் உருவாக்கப்பட்டுள்ளது.. சிறு குன்றின்மேல் கடலை பார்த்தபடி வைக்கப்பட்டுள்ள குக்ரி யின் மாதிரி வடிவம், அங்கு வருவோருக்கெல்லாம் கேப்டன் முல்லா வின் தியாகம் பற்றி மௌனமாக ஆனால் அழுத்தமாக கூறி
வருகிறது,
நன்றி ஸ்ரீராமகிருஸ்ண விஜயம்
ஜெய் ஹிந்த்!!!
லேபிள்கள்:
கப்பற்படை,
கேப்டன் மகேந்திரநாத் முல்லா,
தேசியம்,
பகிர்ந்தது,
மஹாவீர் சக்ரா
coimbatore
Coimbatore, Tamil Nadu, India
Subscribe to:
Posts (Atom)