முன்பொருசமயம்கங்கைநதியின்கரையில்சனகர்முதலியமுனிவர்கள்சத்ரயாகம்என்றயாகத்தைத்துவங்கினர்.யாகநிறைவின்போதுசூதமாமுனிவர்அங்குவருகைபுரிந்தார். செனகாதி முனிவர்கள் அவரை வணங்கி உபசரித்தனர்,
அகிலத்தில் அனைத்து பாவங்களையும் போக்க வல்ல கங்கை நதிக்கரைஅவருடைய
வருகையால் மேலும் புனிதம் பெற்றதாக கூறிவரவேற்றனர், அப்போதுசூதமாமுனிவர்அவர்களிடத்தில்கங்கைநதிக்கரையைவிடவும்சிறப்புவாய்ந்ததும், எல்லாபாவங்களையும்போக்கிசுகபோகங்களைவழங்கக்கூடியதுமானஒருபுண்ணிய
க்ஷேத்ரம் காவிரி நதியின் வடகரையில் இருக்கிறது எனக்கூறினார்.
அந்தஆனையைஏற்றுஅவர்பலாசவனத்துபரமசிவனைபூஜித்து வந்தார். அவரது பூஜையின்
பயனாய் சிவபெருமான், உமாதேவியோடு தாண்டவக்கோலத்தில் காட்சியளித்து முனிவரின் சித்த
பிரமையை நிவர்த்தி செய்தார்.
ஆனந்த
பரவசமடைந்த பராசரர், பரமசிவன் தினந்தோறும் அபிஷேகம் கொண்டருளும்
விதமாக தாண்டவக்கோலத்தில் அத்திருத்தலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்க வேண்டுமேன
வேண்டினார். இறைவனும் அவ்வாறே அருள்புரிந்து. பராசரருக்கு முக்தியளித்தார்.
அந்தப்புனித்த்தலமே
காவிரி வடகரை நோக்கிப்பாயும் பலாசவன க்ஷேத்திரம்! அது திருக்கஞ்சனூர்என்றநாமத்தில்அறியப்படுகிறது. சூதமாமுனிவரிடமிருந்துபலாசவனத்தின்சிறப்புகளைப்பற்றிகேள்விப்பட்டசெனகாதிமுனிவர்கள்அந்தத்தலத்தைகாணஆவல்கொண்டனர், சூதமாமுனிவர்விடைபெற்றுச்சென்றதும், தம்தவவலிமையினால்அன்றிரவேதிருக்கஞ்சனூர்
அடைந்தனர். அதிகாலையில் காவிரியில் நீராடி
ஆலயம் சென்றனர். கற்பவிநாயகரைக்கரம் குவித்து வணங்கினர்.ஆலயத்துள்
எழுந்தருளியிருக்கும் அக்னிபுரீஸ்வரரை பலவிதமாய் போற்றித்தாள் பணிந்து தொழுதனர்.
அப்பொழுது
செம்பொன்நிறத்துடன் சூர்யோதயம்நிகழ்ந்தது. தேவர்கள்பூமாரிப்பொழிய, கற்பகாம்பாள்சமேதரராய்அக்னீசப்பெருமான்காட்சிதந்தார். தம்மைதரிசித்தமுனிவர்கள்ஆயிரம்சத்ரயாகம்செய்தபலனைபெறுவார்கள்எனஅருள்புரிந்தார்.
சிவத்தலங்களில்மூர்த்தி, தலம்,
தீர்த்தம் ஆகிய மூன்றாலும்சிறப்புப்பெற்றதுதிருக்கஞ்சனூர்
திருத்தலம். இத்தலத்தில் ஒருநாள் செய்யப்படும் யாகம் ஆயிரம் சத்ர யாகங்கள்
செய்வதற்கு ஒப்பாகும். இங்கே காவிரி
தெற்கிலிருந்த வடக்கு நோக்கி பாய்ந்து உத்ரவாஹினி எனும் வடகாவேரியாக ஓடுகிறது.
இந்த நதியில் ஒருமுறை நீராடினால் கங்கை நதியில் பன்னிரண்டு ஆண்டுகள் நீராடிய பலன்
கிடைக்கும்.
தெற்கு
நோக்கிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது, அக்னீஸ்வரர்
திருக்கோவில். கிழக்கு நோக்கி
எழுந்தருளியிள்ள அக்னீஸ்வரருக்கும், கற்பகாம்பிகைக்கும்
தனித்தனித்திருச்சுற்றுகளுடன் உற்சவ மண்டபம், அலங்கார மண்டபம், பதினாறு கால்
மண்டபம் ஆகியவற்றுடன் சேர்ந்து ஒரு பெரிய திருச்சுற்றாக மூன்றுபிரகாரங்களுடன்கூடியதிருக்கோயில். ராஜகோபுரத்திற்குவெளியில்தெற்குநோக்கியகற்பகவிநாயகர்திருக்கோயிலும், சன்னதித்தெருவில்கிழக்குநோக்கிஹரதத்தர்ஆலயமும்அமைந்துள்ளன. ஹரதத்தருக்குஉபதேசம்செய்ததட்சிணாமூர்த்தி, புல்லுண்டநந்திஆகியமூர்த்திகளும்கொழுவீற்றிருக்கும்சிறப்புப்பெற்றதிருக்கோயில்.
எப்படி
செல்வது : சென்னையிலிருந்தும், கோவையிலிருந்தும்
ரயில்,பேருந்து மற்றும் கார் மூலம்செல்லலாம், கும்பகேணத்திலிருந்துபேருந்து, கார்,மற்றும்ஆட்டோமூலம்திருக்கஞ்சனூர்செல்லலாம்.
No comments:
Post a Comment