30.09.2016_ காலை 4.28 முதல் அடுத்தநாள் காலை 5.28 வரை
புரட்டாசி மாதத்தில் எல்லா சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு
உகந்த நாளாகும். புரட்டாசி மாதத்தில் மகத்துவங்கள் கொண்டது அமாவாசை திதி.
எல்லா மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பானதாக இருந்தாலும், புரட்டாசி
மாதத்தில் வரும் அமாவாசையை 'பெரிய அமாவாசை" என்றும் 'மகாளய அமாவாசை"
என்றும் சிறப்பித்து கூறுவார்கள்.
அமாவாசை நாளில் இறந்த தாய், தந்தையரை நினைத்து வழிபாடு
நடத்துவது வழக்கம். இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து செய்கிற பு+ஜை
வழிபாடு, அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்காக முன்னோர்கள் பித்ரு
லோகத்தில் இருந்து பு+மிக்கு வருவதாக ஐதீகம் உள்ளது.
நாம் செய்யும் வழிபாடுகள், தர்ம காரியங்கள் ஆகியவை
ஆத்மாக்களுக்கு மகிழ்வளிக்கும் செயலாகும். இதனால், அவர்களது பரிபு+ரண ஆசி
நமக்கும் நம் சந்ததிக்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்நன்னாளில் சனீஸ்வரனுக்கு எள் விளக்கு ஏற்றி வணங்கலாம்.
முன்னோர்களை நினைத்து காகத்துக்கு உணவு வைக்கலாம். மகாளய அமாவாசையன்று
புரோகிதர்களுக்கு எள் தானம் வழங்குவது சிறப்பாகும்.
இறந்த அப்பா, அம்மாவுக்கு திதி, சிரார்த்தம் செய்யாமல்
விட்டவர்கள், அப்பா, அம்மா, இறந்த தேதி, திதி போன்றவற்றை மறந்தவர்கள் மகாளய
அமாவாசையில் அவர்களை நினைத்து வணங்கலாம்.
இந்த நாள் விபத்து, துர்மரணம், அகால மரணம் அடைந்தவர்களின் ஆத்மா சாந்தியடைந்து முக்தி கிடைப்பதற்கு மிகவும் உகந்ததாகும்.
புரட்டாசி அமாவாசை நாளில் நம் முன்னோர்களின் பரிபு+ரண ஆசிகளை பெறுவோம்!
No comments:
Post a Comment