யானே பொய்என் நெஞ்சும்
பொய்என் அன்பும்பொய்
ஆனால் வினையேன் அழுதால்
உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின்
தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன்
உனைவந்து உருமாறே.
பொய்என் அன்பும்பொய்
ஆனால் வினையேன் அழுதால்
உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின்
தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன்
உனைவந்து உருமாறே.
பொருள்: தேனே! அமுதமே! கருப்பஞ்சாற்றின் தெளிவே! அடியார்களுக்கு இன்பம் மிகுவிக்கும் பெரியோனே! நான் பொய்யனேன்; என் மனமும் பொய்; நான் செய்யும் அன்பும் பொய்யானது; தீவினை உடையவனாகிய நான் அழுதால் உன்னைப பெறலாம் அல்லவா? சிறியேனாகிய நான் உன்னை வந்து அடையுமாறு அருள் செய்வாயாக!
திருவாசகம் 5:9:10
திருவாசகம் 5:9:10
No comments:
Post a Comment