Thursday, October 15, 2015

முன்னோரை வழிபடும் மகாளய அமாவாசை - 12–10–2015—நமது பித்ருக்கள் நம்மை ஆசிர்வதிக்கும் நன்நாள்...... >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பித்ருக்கு தர்பணம் பற்றி கருடபுரணத்தில்
> >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
> இரவு- பகல் பாராமல், பசியோடும் பாசத்தோடும் தன் வம்சத்தை காண வரும் பித்ருக்கள் அமாவாசைகளில் மிக விசேஷமானது மஹாளய அமாவாசையாகும். அன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல யமதர்மராஜர், அனுமதி தருவார். அதனால் யம காவலர்கள், பித்ருக்களை அழைத்துக்கொண்டு சூரியன் இருக்கும் இடத்திற்கு வருவார்கள். அங்கிருந்து சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு பித்ருக்களை அழைத்து வருவார்கள்.
> பித்ருக்களை அவரவர் இல்லத்திற்கு செல்ல அனுமதிப்பார்கள் யமதர்மராஜாவின் காவலர்கள். அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், பசியோடும் வருவார்கள்.
> நம் வம்சத்தினர் நமக்கு உணவு தருவார்களா என்று காத்திருக்கும் பித்ருக்களின் ஆத்மா.
>
> அதனால், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு நிச்சயம் தர்பணம் தர வேண்டும். நாம் தரும் பிண்டமும், தண்ணீரும்தான் அவர்களுக்கு உணவு. மஹாளய அமாவாசை நேரம் முடிந்த உடனே, யம தேவரின் காவலர்கள் மீண்டும் பித்ருக்களை அழைத்துக்கொண்டு யமலோகம் செல்ல, சூரிய பகவானின் வாகனம் இருக்கும் இடத்திற்கு செல்வார்கள்.
> அதற்காக அவர்கள் அதிக தூரம் நடந்து செல்வார்கள்.
> சூரியனின் வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு செல்ல பித்ருக்களும், யமதர்மரின் காவலர்களும் நாள் ஒன்றுக்கு இருநூற்று நாற்பத்தேழு காதவழி தூரம் இரவும் பகலும் நடந்து செல்ல வேண்டும்.
>
> அவர்கள் போகும் பாதையில் கூர்மையான ஈட்டியை போல் இலைகள் கொண்ட காடு இருக்கும். இத்தனை தூரம் அவர்கள் நடக்க இருப்பதால்தான் பித்ருக்களுக்கு, பிண்டம் தர வேண்டும். இல்லை என்றால் அவர்கள் பசியோடும், தாகத்துடனும் யம தூதர்களுடன் நடக்கும்போது சோர்வு அடைந்து, மயங்கி விழுவார்கள். அந்த சமயத்தில், தங்களுக்கு உரிய மரியாதை தராத தன் வம்சத்தை சபிப்பார்கள்.
> பித்ருக்களின் சாபம்பட்ட குடும்பத்தில்தான் துர் சம்பவங்கள் நடக்கும். தெய்வம் கூட கருனை காட்டாது – உதவி செய்யாது என்கிறது கருட புராணம்...
> மகாளயம் என்பது புரட்டாசி மாதத்தில் செய்யப்படும் ஒரு பொது சிரார்த்தமாகும். சிரார்த்தம் என்பதற்கு சிரத்தையோடு செய்யப்படுவது என்பது பொருள். புரட்டாசி மாதத்து அபரபக்கப் பிரதமை முதலாக, பூர்வ பக்கச் சதுர்த்தி வரையுள்ள காலம் மகாளயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் இறந்த நமது முன்னோர்களுக்கு கர்ம காரியங் களைச் செய்யலாம். இவ்வாறு செய்யப்படும் கிரியையானது, இருபத்தொரு யாகங்களில் ஒன்று என்று கூறப்படு கிறது.
>
> இது பிதுர் தேவதைகளுடைய திருப்தி யின் பொருட்டு செய்யப்படும் பிண்ட கருமம். மரணம் அடைந்தவர்கள் நரகம் எய்துவதை தவிர்த்து, அவர்கள் சுகமாய் இருப்பதைக் குறித்து செய்யப்படும் கிரியை சிறப்பு வாய்ந்ததாகும்.
>
> தெற்கு நோக்கிச் சஞ்சரிக்கும் சூரியனின் தென்பாகத்து நடுப்பாகம், புரட்டாசி மாதத்தில் பூமிக்கு நேராக நிற்கின்றது. அப்போது சந்திரனது (அபரபக்கம்) தென்பாகமும் நேர்க்கோட்டில் நிற்கும். இந்த தருணத்தில் பிதுர் கர்மங்களைச் செய்வது விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது. பூர்வபக்கம் என்பது பகல், அபரபக்கம் என்பது இரவு. பூர்வபக்கப் பிரதமை உதயமாகும், இராக்கால முடிவு அமாவாசை, பகற்கால முடிவு பூரணையாகும். இந்த நேரத்தில் பிதுர் கடன்களைச் செய்வது சாலச்சிறந்தது.
>
> சிரார்த்த கர்மங்களுக்குரிய சிறந்த தலங்கள் என சில உள்ளன. அதில் காசி, கயை, பிரயாகை, குருஷேத்திரம், கோகர்ணம், குருஜாங்கலம், புட்கலஷேத்திரம் முதலியவை முக்கியமானவையாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் இந்த சிறப்பை பெற்று விளங்குகிறது. மேற்கண்ட அனைத்துத் தலங்களிலும், கயை தலத்தில் சிரார்த்தம் செய்வது மிகவும் விசேஷமானது.
>
> தேவர்களின் வருடக் கணக்குப்படி, புரட்டாசி மாதம் நடு ராத்திரியாகும். இந்த நேரத்தில் நிசப்தம் நிலவும். எனவே தேவர்களின் ஆராதனைகளுக்கும், பிதுர்களை உபசரிப்பதற்கும் இதுவே சிறந்த காலமாக கருதப்படு கிறது. சாஸ்திரங்கள், நுண் முறைகள் மற்றும் ஆன்றோர்களின் கூற்றும் அதுவேயாகும். எனவே அந்த காலத்தில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்து கர்மங்களை நிறைவேற்ற வேண்டியது அவசியம்.
>
> அன்றைய தினத்தில் மேலே கூறப்பட்ட புண்ணியத் தலங் களுக்குச் சென்று நம்முடைய மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். அவ்வாறு செல்ல முடியாதவர்கள், அருகில் உள்ள கோவில்களின் முன்பாக இருக்கும் நீர் நிலைகளில் வைத்து தர்ப்பணத்தை செய்யலாம். பெரும்பாலும் கடற்கரைப் பகுதிகளில் இதுபோன்ற தர்ப்பண நிகழ்வுகள் நடத்தப் படுகின்றன. தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசை அன்று, முன்னோர்களுக்கு பிதுர் காரியங்களைச் செய்து கடமைகளை நிறைவேற்ற ஏராளமானவர்கள் குவிவார்கள். அன்றைய தினம் கடற்கரைப் பகுதியே மக்கள் வெள்ளத்தில் நிரம்பி காணப்படும். நம் முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும், இந்த பிதுர் காரியங்களின் காரணமாக, முன்னோர்களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
>
> மகாளய அமாவாசை அன்று, காலையில் எழுந்து வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் குளித்து முடித்து, அருகில் உள்ள கோவில்களில் இருக்கும் நீர்நிலைகளிலோ அல்லது கடற்கரைப் பகுதியிலோ சென்று பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்றைய நாள் முழுவதும் உபாவசம் இருந்து, முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். அவர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை நைவேத்தியமாக படைத்து இறைவனை வணங்க வேண்டும். மேலும் அன்றைய தினத்தில், இறை அடியார் களுக்கு நம்மால் இயன்றவரை அன்னதானம் செய்து மகிழ்வித்தல் வேண்டும். இவ்வாறு செய்வதால் முன்னோர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைத்து அவர்கள் நற்கதி அடைவார்கள். அதன் வாயிலாக அவர்களின் தலைமுறையும் நல்ல நிலையை அடையும்.
>
> A.P.VidyaMani,
> AstroAnalyst & Gemologist
> 9943394405

Thursday, October 08, 2015

சிட்டு குருவிகள் எங்கே போயின

நன்விஜய் பிரசாத்

நேற்று ஒரு பதிவில் Bird feeder இருப்பதை பார்த்து சிட்டு குருவிகள் எங்கே போயின என்று இணையத்தில் படிக்க தொடங்கினேன்.
சிட்டுக்குருவிக்கு மருத்துவ குணங்கள்( சிட்டு குருவி லேகிய மேட்டர்) இருக்கின்றன எனும் தவறான நம்பிக்கைகளால் இவை பெருமளவில் அழிக்கப்பட்டு வருகின்றனவாம்.
* நகரங்களில் கட்டிட அமைப்புகள் மாறி ஜன்னல், தாழ்வாரம், முற்றம் போன்றவை மறைந்து, கண்ணாடி சூழப்பட்ட குளிர்வறைகளாக மாறி வருவதால் மனிதர்களுடனே சேர்ந்து வாழ்ந்த குருவிகளுக்கு இருப்பிடமின்றிப் போய்விட்டதாம்
* சிறு மளிகைக் கடைகள் மறைந்து. பல்பொருள் அங்காடிகளாக மாறுவது அவற்றிற்கு சிந்தும் தாணிய உணவு கிடைக்க வழியில்லாமல் செய்து விடுகிறதாம்,
* மேலும் நகரங்கள், மரம், செடி, கொடி போன்றவைகளை இழந்து கான்க்ரீட் காடுகளாகி வருவது குருவிகள் வாழ்விற்கு ஏற்றதாக இல்லையாம்.
* குளம், குட்டை போன்றவை மறைந்ததால் தண்ணீர்ப் பற்றாக்குறையும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
* ஒலி மாசும் ஒரு பெரிய எதிரியாக சொல்லப்படுகிறது.
* அலைபேசிக் கம்பத்தில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சினாலும் சிட்டுக் குருவிகள் பாதிக்கப்படுகின்றனவாம்.
* கிராமங்களில் விவசாய நிலங்கள் குறைவதால் சிட்டுக் குருவிகளின் முக்கிய உணவான தானியங்கள் கிடைப்பது அரிதாகி இவை அழிகின்றனவாம்.
* பெட்ரோலில் இருந்து வெளியேறும், 'மீத்தைல் நைட்ரேட்' எனும் ரசாயனக் கழிவுப் புகையால், காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் அழிகின்றனவாம்.
* இவையெல்லாவற்றையும் விட சிட்டுக் குருவிகள் அழிவிற்கு முக்கிய காரணியாக விளங்குவது நாம் கணக்கின்றிக் கொட்டும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தானாம். DDT என்ற பூச்சிக்கொல்லி மருந்து தானியங்களுக்குத் தெளிப்பதால், அதனை உண்ணும் சிட்டுக் குருவிகள் இறக்க நேரிடுகிறது எனப் பல பறவையியலாளர்கள் சொல்கின்றனர்.
தற்போது இதை உணர்ந்து சிட்டுக் குருவிகள் அழிவை தடுக்க பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் இவற்றிற்கு தானியங்கள், நீர் வைக்க பரிந்துரைக்கப் படுகிறது. இவைகளுக்கு சிறு அட்டைப் பெட்டி, மரத்தாலான வீடுகளும் அமைக்கப்படுகிறது.

சிட்டுக்குருவி பற்றிப் பேசும் போது நேச்சர் பார் எவர் சொசைட்டியின் (Nature Forever Society) நிறுவனர் முகமது திலவார் (Mohamed Dilawar) பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சிட்டுக்குருவியினத்தைக் காப்பாற்றத் தம் முழு நேரத்தையும் அர்ப்பணித்திருக்கும் இவர் துவங்கிய 'நம் சிட்டுக்குருவியைக் காப்பாற்றுவோம்,' (SAVE OUR SPARROWS) (SOS) என்ற விழிப்புணர்ச்சி இயக்கம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. புர்ஹானி பவுண்டேஷனுடன் (Burhani Foundation (India) இணைந்து 52000 பறவை உணவளிப்பான்களை உலகமுழுதுக்கும் வழங்கியிருக்கிறார். இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இணைப்பு:- http://www.natureforever.org/
.
ஓசூர் அடுத்த, கும்மாளாபுரம், கொத்தகொண்டப்பள்ளி, முத்ததுார், தளி சுற்று வட்டார பகுதிளில் உள்ள மொத்தம், 236 கிராமங்களில் அட்டை கூடுகள் வைக்க திட்டமிட்டு தற்போது, 80 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், ஆனைக்கல் பகுதியில், 44 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு இதில், 20 கிராமங்களில் அட்டை கூடுகள் வைக்கப்பட்டள்ளது. இந்த முயற்சியால் தற்போது, 10 ஆயிரம் வீடுகளில் சிட்டு குருவிகள் வாழ்வதற்கு வசதியாக அட்டை கூடுகள் வைக்கப்பட்டுள்ளது.
.

Tuesday, September 15, 2015

பிரதோஷ விரத மகிமைகள்

20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்- மஹா பெரியவா

மொத்தம் 20 வகை பிரதோஷங்களும் அதன் பலன்களும்:
சோம வாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்தல் மிக விசேசம். அதுவும் அன்று பிரதோஷம் வேறு வந்தால் அன்று சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில் வழிபாடும் செய்தல் பல்கோடி புண்ணியத்தை தரவல்லது. குறிப்பாக ஜாதகத்தில் மதி [சந்திரன்] நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் உங்கள் ஜாதகத்தில் உள்ள மதி மட்டுமல்ல உங்கள் மதியும் [புத்தியும் நன்றாகும்]
மொத்தம் 20 வகை பிரதோஷங்கள் .
1.தினசரி பிரதோஷம்
2.பட்சப் பிரதோஷம்
3. மாசப் பிரதோஷம்
4. நட்சத்திரப் பிரதோஷம்
5. பூரண பிரதோஷம்
6. திவ்யப் பிரதோஷம்
7.தீபப் பிரதோஷம்
8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
9. மகா பிரதோஷம்
10. உத்தம மகா பிரதோஷம்
11. ஏகாட்சர பிரதோஷம்
12. அர்த்தநாரி பிரதோஷம்
13. திரிகரண பிரதோஷம்
14. பிரம்மப் பிரதோஷம்
15. அட்சரப் பிரதோஷம்
16. கந்தப் பிரதோஷம்
17. சட்ஜ பிரபா பிரதோஷம்
18. அஷ்ட திக் பிரதோஷம்
19. நவக்கிரகப் பிரதோஷம்
20. துத்தப் பிரதோஷம்
20 வகை பிரதோஷங்கள்  அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.
1.தினசரி பிரதோஷம் :
தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு "முக்தி" நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.
2. பட்சப் பிரதோஷம் :
அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் "திரயோதசி" திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.
3. மாசப் பிரதோஷம் :
பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் "திரயோதசி" திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் "பாணலிங்க" வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.
4. நட்சத்திரப் பிரதோஷம் :
பிரதோஷ திதியாகிய "திரயோதசி திதி"யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.
5. பூரண பிரதோஷம் :
திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது "சுயம்பு லிங்கத்தை"த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.
6. திவ்யப் பிரதோஷம் :
பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது "திவ்யப் பிரதோஷம்" ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.
7.தீபப் பிரதோஷம் :
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.
8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :
வானத்தில் "வ" வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, "சப்தரிஷி மண்டலம்" ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.
9. மகா பிரதோஷம் :
ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் "மகா பிரதோஷம்" ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.
குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, "தண்டீசுவர ஆலயம்". திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள "திருப்பைஞ்ஞீலி" சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள "ஸ்ரீவாஞ்சியம்" சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள "திருக்கோடி காவல்" சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், "மகா பிரதோஷம்" எனப்படும்.
10. உத்தம மகா பிரதோஷம் :
சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.
11. ஏகாட்சர பிரதோஷம் :
வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்' என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.
12. அர்த்தநாரி பிரதோஷம் :
வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.
13. திரிகரண பிரதோஷம் :
வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
14. பிரம்மப் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.
15. அட்சரப் பிரதோஷம் :
வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்' என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.
16. கந்தப் பிரதோஷம் :
சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.
17. சட்ஜ பிரபா பிரதோஷம் :
ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்'. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.
18. அஷ்ட திக் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.
19. நவக்கிரகப் பிரதோஷம் :
ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.
20. துத்தப் பிரதோஷம் :
அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

Sunday, September 06, 2015

பட்டுப்புடவை வாங்குவதற்கான குறிப்புகள்:

உடல் அமைப்பிற்கு ஏற்றாற்போல் பட்டுபுடவைகள் வாங்கவேண்டும். பார்ப்பதற்கு ஆடம்பரமாய் இருப்பதைக்காட்டிலும் உடல் அமைப்பிற்கு ஏற்றாற்போல் தேர்வு செய்வதே புடவையை இன்னும் எடுப்பாய் காட்டும்.

உடலமைப்பு சற்று பருமனாக இருப்பவர்கள், மென்பட்டு, கோரா பட்டு, திசு பட்டு ஆகிய வகைகளை தவிர்ப்பது நல்லது. அது உடலை மேலும் வெளிப்படுத்தும்படியாக இருக்காது. அவர்களுக்கு மிருதுவான சிபான், கிரேப் போன்ற ரகங்கள் பொருத்தமாக இருக்கும்.

உடலமைப்பிற்கு ஏற்றாற்போல் பட்டுப்புடவை வாங்குவதற்கான குறிப்புகள் :

    பருமனான உடலுடைய பெண்கள் ஜார்ஜெட், சிபான் (அ) சிக்னான் ஆகிய ரகங்களை தேர்வு செய்தல் வேண்டும். கனமான மைசூர் பட்டு புடவை ரகங்கள் அவர்களை சற்று ஒல்லியாக காட்டும்.
    மெல்லிய பெண்கள் Organza, பருத்தி, திசு மற்றும் டசர் ரக புடவைகள் வாங்கிக்கொள்ள வேண்டும். இந்த புடவைகள் ஒரு முழுமையான தோற்றத்தை அளிக்கின்றன. இந்த துணிகள் ஒல்லியான பெண்களுக்கு மிக அதிக ரகங்களை வைத்துள்ளது.
    உயரம் குறைவான பெண்கள், சன்னமான பார்டர் அல்லது பார்டரே இல்லாத புடவைகளை வாங்க வேண்டும். பெரிய பார்டர் புடைவைகளை அவர்கள்  கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் அத்தகைய பெரிய பார்டர் புடவைகள் அவர்களை இன்னும் குள்ளமாக காட்டும்.
    உயரமான பெண்கள் பெரிய பார்டர் உள்ள புடவைகளை வாங்கவேண்டும்.
    அடர் மாநிற பெண்கள் எப்போதும் கருஞ்சிவப்பு, பச்சை, அடர்த்தியான பிங்க் போன்ற நிற புடவைகளையே தேர்வு செய்ய வேண்டும்.


புடவை அணிவதற்கான குறிப்புகள்:
முதல் நிலை :

    ஒன்று உள்பாவாடை. இது இடுப்பிலிருந்து பாதம் வரை இருக்கும் ஒரு ஆடை. ஒரு நாடாவினால் இடுப்போடு இறுக்கப்பட்டு இருக்கும். இந்த ஆடை புடவையின் அடிப்படை நிறத்திற்கு மிக நெருக்கமாக இருக்கவேண்டும். இது அணிந்தபிறகு எந்த இடத்திலும் வெளியே தெரியாதவாறு இருக்கவேண்டும்.
    ப்ளவுஸ் : இது சரியான அளவில், புடவையின் நிறத்தை ஒத்திருக்க வேண்டும். இது ஸ்லீவ் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஆக இருக்கலாம். மார்பு பகுதியின் கீழே முடிவடையுமாறு இருக்கவேண்டும்.


இரண்டாம் நிலை :

    புடவை அணியும்போது மேல் பகுதியை தொப்புளின் அருகே உள்பாவடையின் மேல்புறத்தில் சொருகவேண்டும். மொத்த புடவையும் இடது கைப்புறமாக வருமாறு பார்த்துக்கொண்டு, புடவை தரையை தொடுமாறு அணியவேண்டும். இப்பொழுது புடவையை உங்களைச்சுற்றி ஒரு சுற்று சுற்றி, வலதுபுறத்தில் உங்களின் முன்பகுதிக்கு வருமாறு அணியவேண்டும்.


மூன்றாம் நிலை :

    தோராயமாக 5  அங்குல அளவில், 5  முதல் 7  மடிப்புகளை சொருகியுள்ள பகுதி வரை மடிக்கவும். மடிப்புகளை சரியாக பிடித்து சேர்த்து கீழேவரை மடிப்பு சரியாக உள்ளதா என பார்த்து சரி செய்யவும். ஒரு சேப்டி பின்னை வைத்து மடிப்பு கலையாமல் பார்த்துக்கொள்ளலாம்.


நான்காம் நிலை :

    மடிப்புகளை சரியாக பிடித்து தொப்புளின் இடது ஓரமாக உள்பாவடையில் சொருகவும்.


ஐந்தாம் நிலை :

    மீதமுள்ள புடவையை இன்னொருமுறை இடத்திலிருந்து வலமாக  உங்களைச்சுற்றி கொண்டுவந்து, உங்கள் இடுப்பின் முன்பகுதிக்கு கொண்டுவந்து புடவையின் மேல் பார்டர் பகுதியை கையில் பிடிக்கவும்.


ஆறாம் நிலை :

    மீதமுள்ள புடவையின் பகுதியை சிறிது உயர்த்தி உங்கள் பின்பகுதியில் கொண்டுவந்து வலது கையின் கீழே கொண்டு வந்து உடலின் குறுக்காக கொண்டுசென்று  இடது கையின் மேலே போடவும். இப்போது புடவையின் மீதி பகுதி உங்கள் முழங்கால்களின் அளவிற்கு வந்து விழுந்திருக்கும்.

    இடது தோள்பட்டையிலிருந்து இறங்கியிருக்கும் புடவையின் பகுதியை பல்லவ் அல்லது பல்லு என்பார்கள். அந்த பகுதி தோள் பட்டையிலிருந்து சரிந்து வராமல் இருக்க தோள்பட்டையின் ப்ளவுஸ் உடன் இணைத்து சேப்டி பின் அணிந்துகொள்ளலாம்.


புடவை பாதுகாப்பு / பராமரிப்பு / சலவை குறிப்புகள்

சலவை

    முதல் சலவையின்போது, பட்டுப்புடவையை உப்புத்தண்ணீரில் ஊறவைத்து, குளிர்ந்த தண்ணீரில் அலச வேண்டும். துவக்கத்தில் சோப்பு பயன்படுத்தவேண்டாம். இரண்டு அல்லது மூன்று முறை வெறும் தண்ணீரில் மட்டும் சலவை செய்யவும்.
    அதற்குபிறகு, மிதமான சோப்புத்தூள் பயன்படுத்தி விரைவாக அலசிவிடவும்.
    துவக்கத்தில் முந்தி மற்றும் பார்டர் பகுதிகளை தனித்தனியாக துவைக்கவேண்டும்.
    பிற ரசாயனங்களை சலவைக்கு பயன்படுத்த வேண்டாம். அது புடவையின் ஆயுளைக்குறைக்கும்.
    பிரஷ் கொண்டு துவைப்பதோ, அடித்து துவைப்பதோ வேண்டாம். அது ஜரிகையினை சேதப்படுத்தும்.
    பட்டுபுடவையினை பிழிவதோ, முறுக்கி துவைப்பதோ வேண்டாம்.
    ஈரத்துடன் நீண்ட நேரம் சுருட்டி வைத்திருக்காதீர்கள்.


உலர்த்துதல்

    சலவை முடிந்த உடனேயே புடவை உலர்த்தப்பட வேண்டும்.
    முதலில், ஒரு உலர்ந்த துண்டால் புடவையினை சுற்றி அதன் ஈரப்பதத்தை குறைக்க வேண்டும்.
    அதன்பிறகு, ஹேங்கரில் மாட்டி உலர்த்தவும்.
    நேரடியான சூரிய வெப்பத்தில் உலர்த்தவேண்டாம்.


உலர் சலவை

    உலர் சலவையில், திரவங்களைக்கொண்டே பட்டுபுடவையில் உண்டான கரைகளை நீக்குகிறார்கள்.
    திரவங்களில் தண்ணீரின் அளவு மிகவும் குறைவாகவோ, தண்ணீரே இல்லாமலோதான் இருக்கும். ஆகையால் அவை தண்ணீரைப்போல பாட்டின் இழைகளுக்குள் ஊடுருவாது.
    பட்டினை பராமரிப்பதற்கு உலர் சலவைதான் மிகச்சிறந்த வழி.
    உலர்சலவைக்கு கொடுக்கும்முன் கவனிக்கவேண்டியவை :
        கரை படிந்த ஆடைகளை உடனடியாக சலவைக்கு கொடுக்க வேண்டும்.
        எப்படி கரையானது என்று தெளிவாக கூறவும்.
        கண்ணுக்கு தெரியாத கரைகளையும் சுட்டிக்காட்டவும்.
        பளபளப்பு குறைந்த, நிறமிழந்த இடங்களை சரியாக சுட்டிக்காட்டினால், சலவையாளர் அதனை சரி செய்ய இயலும்.


இஸ்திரி

    இஸ்திரியை வைத்து அழுத்தும்போது மிதமான சூட்டில் வைக்கவும்.
    275 க்கு குறைவான வெப்பம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். ஈரப்பதமுள்ள அல்லது நீராவி இஸ்திரி கொண்டே இஸ்திரி செய்யவும்.
    கஞ்சி இடப்பட்ட ஆடைகளுக்கு தனிக்கவனம் எடுக்கவும்.


மடித்து வைத்தல்

    புடவையை எப்போதும் குளிர்ந்த உலர்ந்த இடத்தில்தான் வைக்கவேண்டும்.
    ஜரிகை உடைவதை தவிர்க்க, புடவையின் மடிப்பை மாதம் ஒருமுறையேனும் மாற்றி வைக்கவும்.
    அனைத்து பட்டு ஆடைகளும் மெல்லிய துணிகளில் சுற்றி வைக்கலாம்.
    எம்ப்ராய்ட்ரி ஆடைகளை மடித்து வைக்கும்போது, ஆடைகளுக்குள் உராய்வு குறைவாக இருக்குமாறு பார்த்து மடித்து வைக்கவும்.
    பட்டு ஆடைகளை மாட்டி வைப்பதே பராமரிப்பதற்கு சிறந்த வழி.
    சுருக்கமடையாத ஆடை ரகங்களை நுட்பமாக கையாள வேண்டும்.


பட்டு புடவைகளை பராமரித்தல்

உலர் சலவையே சிறந்தது:
பொதுவாக பாட்டு புடவைகளை உலர்சலவைதான் செய்யவேண்டும். கைகளால் சலவை செய்யும்போது பட்டின் நிலைத்தன்மை மாறி, நிறமிழந்து பளபளப்பு குறையலாம். க்ளோரின் சலவை செய்வது பட்டினை சேதப்படுத்தி மங்கிட  செய்துவிடும்.

பட்டினை சலவை செய்தல்:
ஆடைகளுக்கு தகுந்தாற்போல சலவைக்குறிப்புகளை கையாள வேண்டும். ரா சில்க், சீனா பட்டு, இந்திய பட்டு, கிரேப், பொங்கி, ஷாண்டங், டஸார், டூபியான் மற்றும் ஜக்கார்டு புடவைகளை சலவை செய்வது சுலபம். சலவை முடிந்த உடனேயே புடவை உலர்த்தப்பட வேண்டும். முதலில், ஒரு உலர்ந்த துண்டால் புடவையினை சுற்றி அதன் ஈரப்பதத்தை குறைக்க வேண்டும். அதன்பிறகு, ஹேங்கரில் மாட்டி உலர்த்தவும்.

கரைகளை களைவது:

    புரதக்கறை:
    இவை முட்டை, மாமிசம், ரத்தம், வாசனை திரவியங்கள், பழச்சாறுகள், வேர்வை போன்ற கறை வகைகளை உள்ளடக்குகின்றன. இதுபோன்ற கரைகளை அகற்ற, முதலில் சோப்பினை உபயோகிக்க வேண்டும். பிறகு, குளிர்ந்த நீரில் ஊறவைத்து சலவைக்கு போட வேண்டும். இன்னும் கடுமையான கறைகள் எனில், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் NH2 ஒரு சில துளிகள் கலந்து கறையான இடத்தில் தேய்க்கவேண்டும்.
    கலவையான கறைகள் :
    இவை சாக்லேட், குழம்பு, ஐஸ் க்ரீம், பால் உள்ளிட்ட கரைகளாகும். முதலில் ஒரு உலர்சலவை கரைப்பான் பயன்படுத்தி உலர்த்த வேண்டும். கறை படிந்த பகுதியினை திரவ சோப்பு கொண்டு கழுவி சலவை செய்யலாம். கறை நீக்கியினை பயன்படுத்தியபிறகு, பட்டாடையினை வெந்நீரில் சலவை செய்ய வேண்டும்.
    நெயில் பாலிஷ் கறை :
    நெயில் பாலிஷ் கறை படிந்த இடத்தில் அசிட்டோன் கொண்டு தேய்த்தால் கறை நீங்கும்.
    உதட்டுச்சாய கறைகள் :
    முதலில் உலர்சலவை திரவங்களும் பிறகு, சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு சலவை செய்தால் உதட்டுச்சாய கரைகளை நீக்கலாம்.
    கிரீஸ் கறைகள் :
    இவை பெரும்பாலும் எண்ணெய், வெண்ணெய், மார்கரின், கிரேயான் பென்சில் கறைகள், மருந்துகள், எண்ணெய் போன்ற ஒப்பனை பொருட்கள் ஆகியவற்றால் ஏற்படுகிறது. சோப்புக்கட்டி வைத்து அடித்து துவைப்பது கரையினை மேலும் அடர்த்தியாக்கும். சோப்பு பயன்படுத்தி கறைபடிந்த இடத்தில் தேய்த்த பிறகு, வெந்நீரில் சலவை செய்யவும்.


ஆடைகளின் வண்ணங்களை சரியாக பராமரிக்கவும் :

    பட்டடைகளுக்கு:
    பட்டாடைகள் உலர் சலவை மட்டுமே செய்யப்படவேண்டும். வீடு சலவை தவிர்க்கவும்.
    பாதுகாப்பு குறித்த லேபிளை படிக்கவும் :
    ஒரு சில வினாடிகள் செலவழித்து பாதுகாப்பு குறித்த லேபிளை படிப்பது, சலவை செய்து முடித்த பிறகு வரும் ஏமாற்றங்களை தவிர்க்க உதவும். குளிர்நீரில் மட்டுமே சலவை செய்யக்கூறும் குறிப்புகளை கவனமாக படிக்கவும். உலர்துவதைப்பற்றி உள்ள குறிப்புகளையும் படிக்க தவறாதீர்கள். அந்த ஆடைகள்  எப்படிப்பட்ட நிலையில் உலர்தப்படவேண்டுமென்று அந்த குறிப்புகளில் உணர்த்தப்பட்டு இருக்கலாம்.
    அடர்நிற ஆடைகளை ஒன்றாக சலவை செய்யவும் :
    ஆடைகளை வரிசைப்படுத்துவது, பாதுகாப்பு குறிப்பை கவனிக்கவும், சலவை முறை கண்டறிந்து வகைப்படுத்தவும் உதவியாக இருக்கும். வெண்ணிற ஆடைகளுக்கு மத்தியில் ஒரே ஒரு அடர்நிற ஆடையினை துவைத்த பலருக்கு இந்த நிறம் மங்கும் விஷயம் புரிந்திருக்கும். நிறமிழப்பதை தவிர்க்க, ஆடைகளை நிறவரிசைப்படுத்துங்கள்.
    ஆடைகளை உள்வெளியாக மாற்றி சலவை செய்யுங்கள் :
    சலவை செய்யும்போதும், உலர்த்தும்போதும் ஆடைகளை உள்வெளியாக மாற்றினால், ஆடையில் ஏற்படும்  கிழிசல்களை தவிர்க்க உதவும். ஆடைகளை வெளிப்புறம் சலவை செய்வதும் உலர்த்துவதும் கடுமையாக இருக்கலாம். இது ஆடைகள் மங்கிப்போவதையும் குறைக்கும். குறிப்பாக ஆடைகளை உலர்த்தும்போது, இதனை பின்பற்ற மறக்காதீர்கள். ஏனெனில் சூரியன் ஒரு மிகச்சிறந்த உலர்த்தும் கருவி. அது உங்கள் ஆடைகளின் நிறத்தினை மங்கிடச்செய்யும்.
    சலவை இயந்திரத்தில் ஆடைகளை துணிக்க வேண்டாம் :
    சலவை இயந்திரத்தில் ஆடைகளை ஒன்றாக திணிப்பது வேலையை குறைக்கும் என்பதால் இதனை பெரும்பாலும் அனைவரும் பின்பற்றுவர். அது வேலையை குறைக்குமே தவிர, இயந்திரத்தை கடுமையாக இயக்க வைத்து நமது ஆடைகளை சேதப்படுத்தும். மேலும் இது ஆடைகளை முழுமையாக சுத்தப்படுத்தாமலும், சோப்பினை ஆங்காங்கே தங்கிடச் செய்யும். இதைப்போலவே ஆடைகளை திணிப்பது  இயந்திரத்தின் உலர்த்தும் பகுதியிலும் உலர்த்துவதற்கு நீண்டநேரம் எடுத்துக்கொள்ளும். சலவை இயந்திரத்தினுள் ஆடைகள் இலகுவாக இயங்க விடவேண்டும்.
    குளிர்நீரில் சலவை செய்யவேண்டும் :
    இது பலரின் இல்லங்களில் எழுதப்படாத நியதியாக உள்ளது. நிறங்களுடைய ஆடைகளை நிரமிழக்காமல் பாதுகாத்திட குளிர்நீரில்தான் சலவை செய்யப்படவேண்டும். பல காலங்களாக டிடர்ஜென்டுகள் மூலம் சலவை சியும் முறையானது குளிர்நீரில்தான் பின்பற்றப்பட்டு வருகின்றது.
    அளவுக்கதிகமாக உலர்த்துவது வேண்டாம் :
    நாம் அதிகமான நேரம் உலர்த்துவதை சாதரணமாக செய்துவிடுகிறோம். இது நம் அடர்நிற மற்றும் நல்ல நிறமுள்ள ஆடைகளுக்கு நல்லதல்ல. அளவுக்கதிகமாக உலர்த்துவது நிறங்களை மங்கிடச் செய்யும். சலவை இயந்திரத்தில் உலர்த்தும்போது உலர்த்தும் நேரத்தை சரியாக பின்பற்றுங்கள். இயந்திரத்திலிருந்து உலர்த்தி எடுக்கும்போது சற்றே ஈரமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
    வினிகர் சேர்க்கவும் :
    வினிகருக்கு இனிமையான மணம் இல்லையென்றாலும் சலவையில் ஒரு கப் வினிகர் சேர்த்துவது, ஆடைகளை இயற்கையான முறையில் மிருதுவாக வைக்கவும், நிறமிழக்காமல் இருக்கவும் உதவுகிறது. வினிகரின் மணம் சலவியின்போது நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
    இயந்திரத்தில் மிதமான சுழற்சி / மிதமான டிடர்ஜென்ட் பயன்படுத்தவும் :
    உங்களின் தனித்துவமான ஆடைகளை நன்றாக பராமரிக்க எப்பொழுதும் சலவை இயந்திரத்தில் மிதமான வேகத்தில் இயக்கவும், கைகளால் சலவை செய்வதையும் பின்பற்றுங்கள். நிறைய டிடர்ஜெண்டுகள் நிறங்களை மங்கிடாமல் பாதுகாத்து சலவை செய்வதற்கென்றே இருக்கின்றன.

Sunday, June 14, 2015

நவகிரஹ நாயகர்கள் & வழிபாட்டுப்பின்னணி தொகுப்பு

தோஷங்கள் விலக்கி நலன்கள் அருளும் நவகிரஹ தலதரிசனம்


நவகிரக தலங்களும் கும்பகோணத்தைச் சுற்றி சுமார் அறுபது கி.மீ  சுற்றளவில் அமைந்துள்ளன. பக்தர்கள் ஒரே சமயத்தில் ஒன்பது தலங்களுக்கும் சென்று வழிபட விரும்பினால் கும்பகோணத்துக்குச் சென்று விடுதி எடுத்துத் தங்கிக் கொள்ளலாம். கும்பகோணத்திலிருந்து பேருந்து மூலம் ஒவ்வொரு கோயிலுக்கும் சென்று வருவதற்கு சுமார் மூன்று நாட்கள் பிடிக்கும்.

சுற்றுலா நிறுவனங்கள் கார் மற்றும் வேன்கள் மூலம் ஒன்பது கிரகதலங்களுக்கும் பக்தியாத்திரையாக அழைத்துச் செல்கின்றன. இவற்றின் மூலமாக நவகிரக தலங்ளுக்குச் சென்றால் ஒரே நாளில் அனைத்துத் தளங்களுக்கும் சென்று வரலாம். செலவும் அதிகமாகாது. வீண் அலைச்சலையும், உடல் அசதியையும் தவிர்க்லாம். நான்கு பேர் என்றால் தனிப்பட்ட முறையில்கார் அமர்த்திக் கொண்டு செல்லலாம்.அதற்கு மேற்பட்ட குழு என்றால் வேன் அமர்த்திக் கொண்டு செல்லலாம்.  

                                                       
வறட்சி நீக்கி வளம் சேர்க்கும் கணபதி அக்ரஹாரம் மஹாகணபதி




நவகிரக தல வழிபாட்டுப் பின்னனி-1 

நவகிரக தல வழிபாட்டுப்பின்னணி - 2 

நவகிரக தல வழிபாட்டுப் பின்னனி -3 

                            

சுக வாழ்வு நல்கும் சூரியனார் கோயில் - சூரிய பகவான் 
   
                                                          சூரிய பகவான்  



வாழ்வை வளர்பிறையாக்கும் திங்களூர் கைலாசநாதர் மற்றும் சந்திரன்  

                                                          சந்திர பகவான் 

பிணி நீக்கி வளம் சேர்க்கும் புள்ளிருக்குவேளூர் வைத்திய நாதர் மற்றும் அங்காரகன் 

                                                         செவ்வாய் - அங்காரகன் 



சுபமும், சுகமும் அருளும் திருவெண்காடு சுவேதாரேண்யேசுவரர் மற்றும் புதன் 

                                                           புதன் - வித்யாகாரகன்                                      


அஞ்ஞானம் அகற்றி நல்ஞானம் நல்கும் ஆலங்குடி ஆபத்சகாயர் மற்றும் குரு பகவான்  

                                   குரு பகவான் 



சித்தம் தெளியவைத்து , பாவங்கள் போக்கும் திருக்கஞ்சனூர் அக்னிபுரீஸ்வரன்


                                      வெள்ளி - சுக்கிரன்


அள்ள, அள்ளக்குறையாமல் கொடுக்கும் வள்ளல் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் மற்றும் சனீஸ்வரர்


                                                             சனி பகவான்     


                                   
 நாடி வந்தோருக்கு நற்கதியளிக்கும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி மற்றும் ராகு


                                                                     ராகுபகவான் 


வறுமை நீக்கி,வளமை சேர்க்கும் நாகநாதன் கோயில் மற்றும் கேது  


                                                                  கேது பகவான்



அமைதியும் , ஆனந்தமும் அருளும் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி