Monday, May 12, 2014

வாழ்வை வளர்பிறையாக்கும் திங்களூர் கைலாசநாதர் மற்றும் சந்திரன்

கடுங்கோடை செங்கதிரோன் தணலாத்தகித்தான் களிந்தோடும் காவிரி வறண்டு வற்றிப் போயிறுந்தது.

அந்த முதியவர் தனது சிஷ்யர்களுடன் திருப்பழனத்தில் ஆபத்சகாயரைத் தரிசித்துவிட்டு திங்களூரை நோக்கி நடந்து வந்தார். கழுத்தில் ருத்ராட்சம், நெற்றியில் திருநீறு, வாயில் சிவநாமம் அவரே அப்பர் எனும் திருநாவுக்கரசர்





ஊரில் நுழைந்து நடக்க, நடக்க கானும் இடமெல்லாம்  அவர் திருநாமம் தாங்கிய அறிவிப்புப் லகைகள், திருநாவுக்கரசர் வேத  பாட சாலைகள், திருநாவுக்கரசர்  அன்ன சாலை. எங்கும் நாவுக்கரசர் எதிலும் நாவுக்கரசர்


அவ்வூரில் வாழ்ந்து வரும் அப்பூதியடிகள் என்னும்  சிவனடியார்தான், தாம் கண்ட ஆச்சர்யங்களைச் செய்த அறங்காவலர் என அறிந்த அப்பர் அவரைக் காணும் அவாவுடன் அப்பூதியடிகளின் இல்லம் அடைந்தார்.

நாவுக்கரசரை யார் என்று அறியா அடிகள், சிவனடியார் எவரையும் வரவேற்பதைப் போன்றே அப்பரையும் இன்முகத்துடன் வரவேற்றார்.


அப்பர் அப்பூதியடிகள்அமைத்துள்ள பாடசாலை, தர்மசாலை, வாசகசாலை, தண்ணீர்ப் பந்தல் மற்றும் அவரின் ஏனைய தருமச் செயல்களைக் கண்டும், கேள்வியுற்றும் அவரை தரிசிக்க வந்ததாகக் கூறினார்.

மேலும் சிவனடியாகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உதவ வேண்டி இத்தனை தர்ம சாலைகள் அமைந்தவர், அவற்றுக்கெல்லாம் தம் திருப்பெயரை வைக்காமல் யாரோ ஒருவரின் பெயரை எழுதியதன் காரணத்தை விளக்க வேண்டினார் நாவுக்கரசர்.

அதைக் கேட்ட அப்பூ
தியடிகள் ஆங்காரம் கொண்டார். சமணருடன்  சேர்ந்திருந்த பல்லவ  மன்னன்  செய்த  கொடுமைகளை ச் சிவனருளால்   நீக்கிஇம்மையில்  சிவனருள்  பெறலாம் என
இவ்வுலகிற்கு விளக்கிக் காட்டி   நாவுக்கரசரின் பெயரோ வேறொரு பெயர்சிவ இலச்சினைகளோடு  என்  முன் நின்று தகாத வார்த்தைகளைக் கேட்ட    நீர்   யார் ? உமது பெயரென்ன? என  ஆத்திரத்துடன்  வினவினார்.

அப்போது திருநாவுக்கரசர், பரமசிவனால்  சூலை நோய் உண்டாக்கப்பட்டு பின்னர் அவரால் ஆட்கொள்ளப் பெற்ற நாவுக்கரசன் நானே! எனக் கூறினார்.
அப்பூதி அடிகள் கண்களில் நீர்  மல்க வீழ்ந்து  நாவுக்கரசரின்  தாள்களைப்  பற்றினார்மானசீக   குருவான நாவுக்கரசரை  நேரில் கண்டதும் அடிகளின் நெஞ்சம்  மகிழ்ச்சியில் திளைத்தது.

தமது இல்லத்தில்  நாவுக்கரசர்  உணவருந்திச்  சென்றால் தான்  தமது  பிறவிப்  பயன்  ஈடேறும்  என்று  வேண்டினார்.

வேண்டுதலை  ஏற்ற  நாவுக்கரசர்  ஆலையத்தில்  எழுந்தருளியுள்ள  கைலாசநாதரை   தரிசித்து  வருவதாகக் கூறிச்  சென்றார்.

அப்பூதியடிகளின்   மைந்தனான  திருநாவுக்கரசரை   விளித்து  நாவுக்கரசரும்,   அடியார்களும்  அமுதுண்ண  வாழை  இலைகளைப்  பறித்து  வரப்  பணிந்தார்.


தோட்டத்திற்குச்  சென்று    இலையை  அரிகையில்    அப்பாலகனை  அரவம் (சர்பம்) தீண்டியது.   அடியார்  உண்பதற்கு  இடையூறு  ஆகக்கூடாது  என்பதற்காக  அரவம்  தீண்டியதையும்  பொருட்படுத்தாது  விரைந்தோடிச்சென்று  தாயிடம்  வாழையிலைகளை  அளித்து  விட்டு    தன்னைச்  சர்ப்பம்  தீண்டியதை த்    தெரிவித்து    விட்டு  விஷம்  தலைக்கேறி  இறந்து  போனான்


அந்தத்தாயோ   மைந்தன்  இறந்ததற்காக    வருந்தாமல்   அடியார்களுக்கு   அன்னம்  படைக்க  டையூறு  நேர்ந்ததே  என  வருந்தி  இறந்த  மைந்தனைப்  பாயினில்    சுருட்டி  ஒரு  மூலையில்  மறைத்து  வைத்தாள்.


 
ஆலயம்   சென்று  திரும்பிய  நாவுக்கரசரை  ன்றும்   நடவாதது போல்  அமுது  செய்ய  அழைத்தனர்  தம்பதியினர்.

யாவர்க்கும்   இறைவனது  பிரசாதமான  திருநீற்றைக்  கொடுத்த  அப்பர், அடிகளாரின்  மைந்தனான நாவுக்கரசருக்கும் திருநீறு  அளிக்க அவனை அழைக்குமாறு  கூறினார்.



அப்பூதியாறும் அவரது  மனைவியும்  கண்களில்  நீர் வழியநடந்த உண்மைகளைக்  கூறினர்.  மைந்தன்  விருப்பப்படி, தடை  ஏதும்  கூறாமல்
விருந்தேந்க வேண்டும் என வேண்டினார்
.       தம் மேல் இப்படியும் ஒரு பக்தியா என திருநாவுக்கரசர் பிரமித்தார். அடியவர்களிடம் இறந்து போன அப்
பூதியடிகளின்   மைந்தனை  கயிலைநாதன் ஆலையத்திற்கு  
                                 
எடுத்து  வரும்படி  கட்டளையிட்டார்.

                
விஷம் ஏறி  மாண்ட  பாலகனின்  சடலம் சன்னதியின்   முன்பு  வைக்கப்பட்டது.  

                  
அப்பர்  அவ்விடப் பத்திக,த்தை  பாடியவுடன்  பாலகன்  திருநாவுக்கரசன்  உறக்கத்தில்  இருந்து   எழுந்தவன்  போல   எழுந்தான்.

                  
மாண்ட  பாலகனை  பதிகம்  பாடி  உயிர்ப்பித்த  பெருமையும் ,   திருநாவுக்கரசரின்  பெயரையே  தவமாகக்  கொண்டு  பாடியும்எழுதியும்  அப்பூதியடிகள்

முக்தி அடைந்த சிறப்பும் கொண்ட தலம் தான் திங்களூர்..


பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் எழுந்தருளியுள்ள இத்தலம் நவகிரகங்களில் ஒன்றான சந்திரனுக்கும் பரிகாரத் தலம் என்பது மற்றும் ஒரு சிறப்பு.

கிழக்கு நோக்கும் ஆலயத்துக்கு முன் சந்திர புஷ்கரணி உள்ளது.

ஆலையத்துள் நுழைந்தவுடன் இடதுபுறம்
சூரியனின் சன்னிதி . அவரை தரிசித்து தெற்குப் பிரகாரமாகச் சென்றால் தென் திசை  நோக்கி பெரியநாயகி அன்னை அபயஹஸ்த வலது கரம் , வரதான இடது
கரம் என வனப்புடன் எழுந்தருளியிருக்கிறான்.

பிரகாரத்தை வலம் வந்தால் பிள்ளையார், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்திகஜலக்ஷ்மி  சண்டிகேஸ்வரர்  மற்றும்  பைரவருக்குச்  சன்னிதிகள்.

கருவரையில்  கைலாசநாதர்  கிழக்கு  நோக்கி   எழுந்தருளியுள்ளார்ஈஸ்வரனைக் கண்மூடி வணங்கினால் அங்கமெங்கும் பரவசம்   மேலோங்குகிறது.


கிழக்கு நோக்கும் வாயிலுக்கு இடது புறத்தில் சந்திரன் எழுந்தருளி இருக்கிறார்.
சந்திரன் திருமாலின் மார்பிலிருந்து தோன்றினான் என்றும், திருமாலின் மார்பில் இருந்து பிரம்மா தோன்றினார், அவர் மகன் அத்ரி
அந்த அத்ரிக்கும்  அனுசூயாவுக்கும் மகனாகப் பிறந்தவனே சந்திரன் என்றும்,அமுதம் பெருவதற்காகத்  தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தபோது அக்கடலில் இருந்து
லஷ்மிக்கு முன்னதாகத் தோன்றியவன் என்றும் புராணங்கள் சந்திரனின் பிறப்பைப் பற்றிப்
பலவாறாகப் புகழுகின்றன.

தட்சன் தனது புத்ரிகளான அசுவதி முதலான இருபத்தேழு நட்சத்திரக் குமாரிகளையும் சந்திரனுக்கு மணமுடித்தனர். இருபத்தெழுவரில் ரோகிணியிடத்தில் மட்டும் சந்திரன்
மிக்க காதல் கொண்டிருந்தான். தட்சன் சினமுற்று சந்திரனுக்குச் சாபமிட, அதனால் தினமும் தேய்பவனாக மாறினான். சிவபெருமானை வேண்டி, சந்திரன் தவம் செய்ய
அவரதுஅனுகிரகத்தால் மீண்டும் நாள்தோறும் வளர்பவனாகவும் இருந்து  வருகிறான்.
திங்களுர் கயிலைநாதர் கோயில் சந்திர கிரக தோஷ நிவர்த்திக்காகராளமான பக்தர்கள்
வந்து வழிபடும் புகழ் பெற்ற தலம்.

திருத்தலக் குறிப்புகள்
 
தளத்தின் பெயர்:         திங்களுர்
சுவாமியின் திருநாமம்:         கயிலைநாதர்,சந்திரன்
எங்கே உள்ளது:        தமிழ்நாட்டில்,கும்பகோணத்துக்கு அருகில்
எப்படி ச்செல்வது:       சென்னையிலிருந்தும் கோவையிலிருந்தும் கும்பகோணத்திற்கு ரயில்,
       
பேருந்து மற்றும் கார் மூலம் செல்ல்லாம்.
       
கும்பகோணத்திலிருந்து பேருந்து,கார் மற்றும்
      
ஆட்டோ மூலம் சென்றடையலாம்.
எங்கே தங்குவது:       கும்பகோணத்தில் தங்கும் விடுதிகளும்,
       
உணவு விடுதிகளும்  உள்ளன.
தரிசன நேரம்:        காலை 7.00 முதல் இரவு 8.00 வரை.
கோயில் முகவரி:         செயல் அலுவலர்,
         
கைலாசநாதர் தேவஸ்தானம், திங்களுர்,
          
திருப்பழனம் அஞ்சல் 612 204.

போன் : 04362-262499 

 

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

அருமையான திங்களூர் திருத்தலம் பற்றி சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..!

KILLERGEE Devakottai said...

நல்ல பயனுள்ள கட்டுரை வாழ்த்துக்கள், ஐயா தங்களிடம் ஒரு உதவி Please தொடர்பு கொள்ளவும்.
அன்புடன்.
Killergee
www.killergee.blogspot.com

sivappukanneer@gmail.com

Anonymous said...

arumaiyaana katturai, valthukkal KARTHKEYAN

Anonymous said...

அருமை