Monday, October 27, 2014

வறுமை நீக்கி,வளமை சேர்க்கும் நாகநாதன் கோயில் மற்றும் கேது

கிபி பத்தாம் நுற்றாண்ட்டிற்க்கு பின் பிற்கால சோழர்களின் ஆட்சியின் போது காவிரிப் பூம்பட்டினம் பகுதியில் பலகோவில்கள் கட்டப் பட்டுள்ளன. அவைகளுள் ஒன்றுதான் நாகநாதசுவாமி திருக்கோயில். இக்கோயில் பூம்புகாரின் வணிகர் வாழ்ந்த பகுதியான வாணகிரிக்கு மேற்கே உள்ள கீழ்ப்பெரும் பள்ளத்தில் உள்ளது . கேதுவை வழிபட இக்கோயிலுக்கு பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.
தேவரும் அசுரரும் பாற்க்கடலைக் கடைய மந்திர மலையை மத்தாகவும், வாசுகி எனும் பாம்பை கயிறாகவும் பயன்படுத்தினர்.வலிபொறுக்காத் வாசுகி நஞ்சைக்கக்கியது. நஞ்சினைக் கண்டு அஞ்சிய தேவரும், அசுரரும் சிவபெருமானை வேண்டினர். சிவபெருமானும் ந்நஞ்சினை எடுத்து உண்டார். பார்வதி ந்நஞ்சு உள்ளே செல்லாதவாறு தடுக்க , ந்நஞ்சு சிவபெருமானின் கண்டத்தில் தங்கியது. அவர் நீலகண்டர் எனும் பெயர் பெற்றார். அமுதம் கிடைக்காத கோபத்தில் அசுரர்கள் வாசுகியை வைக்கோர்பழுதைப் போல சுருட்டி எரிந்தனர். அது கடற்கறையினிடத்தில் இருந்த ஒரு மூங்கிற்காட்டில் வந்து விழுந்தது . உடல் நைந்து உயிர் போகும் நிலையில் இருந்த அப்பாம்பின் வாலில் இருந்த உயிர் தலைக்கேற அது பிழைத்துக் கொண்டது. சிவபெருமான் தன் நஞ்சினை உண்ணும்படி ஆயிற்றே என உளம் நைந்த வாசுகி அவரிடம் மன்னிப்புப் பெற வேண்டி தவமிருந்தது. சிவபெருமான் அதன் தவத்திற்கு இரங்கி காட்சி தந்தார். வாசுகி தன் பாவத்தைப்பொருத்தருள வேண்டியதோடு , தான் தவம் செய்த மூங்கிற்காட்டில் கோயில் கொண்டு , அங்கு வந்து வழிபடுவோரின் கேது கிரகத் தொல்லைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமென வேண்டிக் கொண்டது. அவ்வாறே சிவபெருமான் நாகநாதசுவாமி என்னும் பெயர் தாஙகி, சௌந்தரநாயகி அம்மையுடன் எழுந்தருளி அருள்பாளித்து வருகின்றார்.

கோயில் இருக்கும் இடம் நாகநாதன் கோயில் எனவும் வாசுகி தவம் செய்த இடம்
மூங்கில் தோப்பு எனவும் வழங்கி வருகிறது. தல விருட்சம் மூங்கில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக கோயில் அமைந்துள்ளது. கோயிலின் எதிரே நாகதீர்த்தம் எனும் திருக்குளம்  உள்ளது. அதன் மேற்கரையில் சந்நிதிக்கு எதிரே அரசும், வேம்பும் உள்ளன.

நுழைவாயிலின் உள்ளே நுழைந்து பிரகாரத்தில் வலமாக வந்தால் மேற்குப் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் , துர்க்கை,லட்சுமிநாராயணர், மகேஸ்வரி, கஜலட்சுமி ஆகிய தெய்வத் திருவுருவங்களை தரிசிக்கலாம். 

வடக்குப் பிரகாரத்தில் சண்டேஸ்வர்ர் சந்நிதியும் , துர்க்கை சந்நிதியும் உள்ளன. இங்கு கிணறும், மூங்கிலும் உள்ளன. கிழக்குப் பிரகாரத்தில் சனீஸ்வர்ர், பைரவர், சம்பந்தர் , நாகர், சூரியன் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.

நாகர் சன்னதிக்கு எதிரே உள்ள நந்தியையும் , பலிபீடத்தையும் வணங்கி மகா மண்டபத்தினுள் சென்றால் அதைஒட்டி அமைந்துள்ள கருவறை வாயிலில் சித்தி விநாயகர் கருவறையில் நாகநாதர் லிங்க வடிவில் எழுந்தருளி உள்ளனர்


அவரை வணங்கி அவரது அருளை யாசித்துத் திரும்பி மகா மண்டபத்துக்கு வரும்போது மேற்கு நோக்கியுள்ள சந்நிதியில் சௌந்தர நாயகியை தரிசிக்கலாம். ஆலயத்தின் கிழக்குப் பிரகாரத்தில் மேற்குநோக்கி நின்ற நிலையில் கேது பகவான் எழுந்தருளி உள்ளார்.  உடல் தெய்வ வடிவிலும் தலை ஐந்து தலை நாக வடிவிலும், கேது பகவான் காட்சித் தருகிறார். இரு கைகளும் வணங்கிய நிலையில் உள்ளன.

கேது பிறப்பினால் அசுரன். அவனுடைய இளமைப் பெயர் ஸ்வர்பானு. அவனுடைய தந்தை விப்சித்து, தாய் சிம்கிகை.

தேவரும், அசுரரும் பாற்கடலைக் கடைந்து  அமிர்த்த்தை எடுத்தனர். மோகினி உருவில் வந்த திருமால் அமிர்த்த்தை அதவர்களுக்குப் பரிமாறிக் கொண்டிருந்தார். அப்போது தானும் உண்ண விரும்பிய ஸ்வர்னபானு தேவ வடிவெடுத்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் சென்றமர்ந்து அமிர்த்த்தை வாங்கி உண்டார்.

இதனைச் சூரியனும் மோகினிக்குச் சொன்னார்கள். மோகினி கையில் வைத்திருந்த கரண்டியால் அசுரனின் தலையில் ஓங்கி அடித்தார். அசுரனின் தலை வேறாகவும் உடல் வேறாகவும் ஆயிற்று.

தலை, பாம்பு உடலைக் கொண்ட கருநிற ராகுவாகவும், உடல் ஐந்து நாகத் தலைகளுடன் கூடிய சென்னிறமுடைய கேதுவாகவும் ஆயிற்று . பின்னர் ராகுவும், கேதுவும் தவம் செய்து கிரகப் பதவி பெற்றார். அதற்கு முன்பு இருந்த ஏழு கிரகங்களுடன் இவர்களையும் சேர்த்து நவகிரகங்களாக மக்கள் வழிபடலாயினர்.

கேதுவின் நிறம் சிவப் பென்பதொல், இவரைச் சென்னிற மலர்களாலும், சென்னிற ஆடைகளைலுங்ம அலங்கரிப்பர். இவருக்குரிய தானியம் கொள்ளு, சமித்து தர்ப்பை, சுவை புளிப்பு, ஆசனம் கொடி உடையது. கேதுவின் வழிபாட்டால் ஸ்வர்ண லாபத்தை அடையலாம் என்பது அனுபவக்கூற்று.

கேது கிரகத் தொடர்பான தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ள மக்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.


திருத் தலக் குறிப்புகள்
தலத்தின் பெயர் : நாகநாதன் கோயில்
சுவாமியின்
திருநாமம் :  ஸ்ரீ நாகநாதசுவாமி, கேது
எங்கே உள்ளது? தமிழ்நாட்டில், கீழ்ப்பெரும்பள்ளத்தில்
எப்படிச் செல்வது? சென்னையிலிருந்தும் கோவையிலிருந்தும் மாயவரத்துக்கு ரயில்,
பேருந்து மற்றும் கார் மூலம் செல்லலாம்.
மாயவரத்தில் இருந்து பேருந்து, கார் மற்றும் ஆட்டோ மூலம்கீழ்ப்பெரும் பள்ளம் சென்றடையலாம்.
எங்கே தங்குவது :
மாயவரத்தில் தங்கும் விடுதிகளும் உணவுவிடுதிகளும் உள்ளன.
தரிசன நேரம்
காலை 6.00 முதல் பகல் 12.30 வரை
மாலை 4.00 முதல் இரவு 8.30 மணி வரை
கோயில் முகவரி,
 நிர்வாக அதிகாரி,
கேது ஸ்தலம், நாகநாதசுவாமி திருக்கோயில்,
வாணகிரி-
609 105, நாகை மாவட்டம்
.

Wednesday, October 15, 2014

ராகு







மனிதத் தலை  நாக உடருடன் இருக்கும் ராகுவின் பிறப்பு வரலாறும் கிரகச் சிறப்பும் சுவை நிறம்பியது.  விப்ரசித்தி என்ற மன்ன்ன் ஒருவனுக்கும்சிம்மிகை என்ற அசுரகுலப் பென்னொருத்திக்கும் மகனாகப் பிறந்தவர் ராகு. தேவர்களும், அசுர்ர்களும்பாற்கடலைக் கடையும் போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப்  பெற்று உண்டுவிட்டான்.
உண்மை அறிந்த மகாவிஷ்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க தலைவேறு உடல்வேறாகி விழுந்தான். ஆயினும் அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப் பகுதியில் உயிர் இருந்த்து . ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்ட , இறைவன் பாம்பின் உடலை அவருக்குக் கொடுத்து அவரை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார்.
ராகு பகவானுக்கு வெள்ளிக் கிழமையில் அபிஷேகம் செய்வித்து, நீல வஸ்திரம் ,கோமேதக மணி, நீலமந்தாரை ஆகியவற்றால் அலங்காரம் செய்து ராகு மந்திரங்களை ஓதி , அருகம்புல்லால் யாகத் தீயை எழுப்பி, உளுந்து தானியம், உளுத்தம்பருப்புப் பொடி அன்னம் ஆகியவற்றால் ஆகுதி செய்து , அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து பிராத்தனை செய்தால் ராகுகிரக தோஷம் நீங்கும்.
அரவெனும் ராகு அய்யனே போற்றி !
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி !
ஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி !
ராகுக்கனியே ரம்மியா போற்றி  !