Monday, August 04, 2014

சூரிய பகவான்


சூரிய பகவான் நவநாயகர்களில் தலைவர்.மூவகை நாடிகளில் பின்கலையாகவும், மூவகை குணங்களில் சாத்வீக குணமாகவும் இருப்பவர். குலத்தில் ஷத்ரியர். சிவனின் முக்கண்களில் வலக்கண்ணாக இருப்பவர். புகழ், மங்களம், உடல் நலம், ஆட்சித் திறம், செல்வாக்கு முதலியவற்றை அருளுபவர்.
சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் அபிஷேகம் செய்தல், ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருத்தல் சூரிய நமஸ்காரம் செய்து  வருதல், சிவப்பு வஸ்த்திரம், சிவப்பு மணி மற்றும் செந்தாமரை மலரால் அலங்காரம் செய்தல், கோதுமை தானியத்தைத் தானம் செய்தல் , சூரிய மந்திரங்களை ஓதி வெள்ளெருக்குச் சமித்தினால் யாகம் செய்தல், கோதுமை சக்கரைப் பொங்கலை நிவேதம் செய்தல், அர்ச்சனை மற்றும் தூப தீபம் காட்டி தீபாராதனை செய்தல் ஆகியவற்றால் சூரிய கிரக தோஷம் நீங்கும்.
பக்தர்கள் தங்களால் இயன்ற பரிகாரங்களைச் செய்து பிராத்தித்தாலே, சூரிய பகவான் சுட்டெரிக்கும் தணலாய் காயாமல் சாந்தப்படுத்தும் தண்ணொளியாய் சாமரம் வீசுவார்.

சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுதந்திரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய் 

No comments: