Thursday, August 21, 2014

நவகிரக தல வழிபாட்டுப் பின்னனி -3




 சற்றும் புன்முறுவல் மாறாமல் அகத்தியர் அது தேவரகசியம் தான் இருந்தாலும் உங்களுக்காக அந்தரகசியம் யாதெனக் கூறுகிறோம். எருக்க இலையில் தயிர் அன்னத்தை வைத்தால் எருக்க இலையின் சாரத்தில் ஓர் அனுஅளவு தொழுநோய்க்கு மருந்தாகி அந்நோயைக்குணப்படுத்தும். எருக்கின் சாரத்தில் ஒரு அனுப்பிரமானத்தைத் தனியே பிரித்தெடுக்க இதுவே மருத்துவ வழி. அதனை பிரம்மதேவன் கூறாது விரத முறை மட்டும் கூறியிருக்கிறார். என்று விளக்கினார்.
அகத்தியரிடம் விடை பெற்று நவ கிரகங்கள் அர்க்கவனத்தின் வடகிழக்குப் பகுதியில் விநாயகரைப் பிரதிஷ்ட்டை செய்து சங்கல்பம் செய்து கொண்டு தவத்தைத் துவங்கினர். எழுபத்தெட்டு நாட்கள் கடுமையான விரதம் மேற்கொண்டனர். முறையான நோன்பு நோற்று எழுபத்தோன்பதாம் நாள் திங்கட்கிழமை விடியலில் காவிரியில் நீராடி எழுந்தனர்.
தங்கள் உடலில் இருந்த தொழுநோய் பாதிக்கு மேல் குணமாகி இருப்பதைக் கண்டு வியந்தனர். பிராணநாதரை வழிபட்டனர். வழிபாட்டின் முடிவில் பிராணநாதரும் மங்களநாயகியும் நவகிரகநாயகர்களுக்குக் காட்சியளிஙத்தன்ர்.  பிராணநாதர் நவநாயகர்களை நோக்கி நவநாயகர்களே உங்களின் தவத்தை மெச்சினோம் .உங்களின் தொழுநோய் இந்த நாழிகையுடன் முற்றும் நீங்கும்.  அர்க்க வனத்தின் வடகிழக்கில் நீங்கள் தங்கி தவம் செய்த ஸ்தலத்தில் உங்களுக்கென தனி ஆலயம் உண்டாகட்டும். அங்கே வந்து உங்களை வழிபடுவோருக்கு நீங்கள் சுதந்திரமாக அனுக்கிரகம் செய்ய வரம் தருகிறோம் என்றருளிறைந்தார்.
இங்ஙனம் தங்களது தொழுநோயும் நீங்கி வரமும் பெற்ற நவகிரக நாயகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அதே நேரம் காலவ முனிவர் அங்கே வந்து நாயகர்களின் காலடிகளில் வீழ்ந்தார்.
அடியேனுக்கு வரம் தந்து விட்டுத் தாங்கள் தொழுநோயால் அவதியுற்றீர்கள் என்பதை இமயமலை வந்த அகத்திய முனிவர் கூற அறியப் பெற்றேன். தங்களைத் துன்பத்திற்கு ஆளாக்கிய அடியேனை மன்னித்து அருள வேண்டும். என்று கதறி அரற்றினார்.
நவநாயகர்கள், காலவ முனிவரைத்தேற்றி சமாதானப்படுத்தினர். அவரையும் அழைத்துக் கொண்டு தாங்கள் தவம் செய்த இடத்தை அடைந்து அங்கே பிரதிஷ்டை செய்த விநாயகரைப் பணிந்து நன்றி நவின்றனர். வினைப்பயன் அறுத்த விநாயகருக்கு கோள் வினைதீர்த்த விநாயகர் என்ற திருப்பெயர் சூட்டினர்.
 
பிறகு காலவ முனிவரிடம் தங்களுக்கென அவ்விடத்தில் தனிக் கோயில் அமைக்கும்படி கூறி மறைந்தனர். காலவ முனிவர் நவநாயகர்களின் ஆணைப்படி அங்கே கோயில் அமைத்து நவகிரகப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
நவநாயகர்களான நவகிரகர்களின் ஆலயம் அமைந்துள்ள பகுதி சூரியனார்கோயில் என்றும் பெயர் பெற்றது. 

நவகிரக தல வழிபாட்டுப் பின்னனி-1  


நவகிரக தல வழிபாட்டுப்பின்னணி - 2 

No comments: