Monday, August 11, 2014

நவகிரக தல வழிபாட்டுப் பின்னனி-1



மனிதனை ஆட்டுவிக்கும் நவகிரக்கங்களே பிரம்மனின் சாபத்தால் ஆட்டுவிக்கப்பட்ட வரலாறு நவகிரகதல வழிபாட்டுக்கு பின்னணியில் உள்ளது. 



முன்னொரு காலத்தில் காலவ முனிவர் என்ற ரிஷி

இருந்தார்,முக்காலத்தையும் அறியும் மூதறிவு உடையவர் அவர். ஆகையால் மற்ற ரிஷிகளும் இவரிடம் வந்து தங்கள் வருங்காலம் அறிந்து செல்வர்.


ஒருநாள் இளந்துறவி ஒருவர் காலவ முனிவரிடம் வந்தார். தனது வருங்காலத்தை உரைக்குமாறு வேண்டினார். முனிவரும் தனது ஞானத்ருஷ்டியால் இளந்துறவியின் வருங்காலத்தை ஆராய்ந்து உமது வருங்காலம் பற்றி கூற ஒன்றும் இல்லை என்றார்.

உடனே இளந்துறவி முனிவரிடம் ‘’முனிபுங்கவரே ! மற்றவரின் வருங்காலம் பற்றிக்கூறும்  நீர் உம்முடைய வருங்காலம் அறிந்ததுண்டோ ?   எனக்கேட்டு நகைத்தார்.

அதிர்ச்சியுற்ற காலவ முனிவர் இளந்துறவியை பார்த்து இவ்வளவு துணிச்சலாக இதுவரை என்னிடம் யாரும் கேட்டதே இல்லை. உண்மையைக்கூறு யார் நீ என்று வினவினார்.

என்னைத்தெரியவில்லையா நான்தான் காலதேவன் என்று இயம்பிய இளந்துறவி மறைந்தார். காலவ முனிவர் சிந்திக்கத் தொடங்கினார். வருங்காலத்தைக் கணக்கிட்டார். முன்வினைப் பயனால் கூடிய விரைவில் தம்மைத் தொழுநோய் பற்றும் என்று  உணர்ந்தார்.மனம் நொந்தார் முகம் வாட்ட முற்றார்.


மற்ற முனிவர்கள் அவருடைய முக வாட்டத்தின்  காரணம் யாது என வினவினார். காலவ முனிவரும் தமது வருங்கால நிலையை விளக்கிக் கூறினார்.



அதனைக் கேட்ட மற்ற முனிவர்கள், ‘’முக்காலமும்  உணர்ந்த மூதறிஞரே! வருவன வந்தே தீரும்  என்பதே தாங்கள்றியாததா? வினை தீர வழி நாடாமல்  வருந்தலாமா? முன்வினைப் பயனை ஊட்டுகிறவர்கள்  நவகிரகங்கள். நவகிரகங்களை  வேண்டி தவம்  செய்து வினைப் பயனிலிருந்து

விடுதலை பெறுங்கள் என்று ஆறுதல் கூறினர்

காலவ முனிவருக்கு இமயமலைச் சாரலில் இருக்க மனம் ஒப்பவில்லை. விந்திய மலைச்சாரல் வந்தடைந்தார்.

நல்ல நாள் பார்த்து பஞ்சாக்னி வளர்த்தார். அதன் நடுவில் நின்று நவகிரகங்களைத் தியானித்து கடுந்தவம் புரியத் தொடங்கினார்.

தவம் முதிர முதிரத் தலத்தின் அக்னி நவகிரக மண்டலத்தை அண்டியது. அக்னியின் வெம்மையை நவகிரகங்கள் உணர்ந்தனர்.  

காலவ முனிவரின் முன் ஒரு சேரக் காட்சியளித்தனர்.


காலவ முனிவர் அக்னியிலிருந்து வெளி வந்து நவநாயகர்களின்  தாள் பணிந்தனர்.கண்களில் நீர் சொரிய, கரங்களைத் தலை மேல் கூப்பி நின்று தோத்திரம் சொல்லி மகிழ்ந்தனர்.


நெஞ்சம் குளிர்ந்த்தால் மகிழ்ந்த நவகிரக நாயகர்கள் , முளிவரே, உம் தவத்தை மெச்சினோம். விரும்பும் வரம் கேளும் என்றனர்.   கலவ முனிவர் அவர்களை நோக்கி நவமண்டலாதிபவர்களே! வினைப் பயன்களையூட்டும் விண்ணவர்களே! அடியேனைத் தொழுநோய் பற்றும் நிலை உள்ளது. தொழுநோய் என்னை அணுகா வரம் அருளுங்கள். என வேண்டினர்.      நவ நாயகர்களும் அவ்வண்ணமே ஆகுக என்று அருளினர். இந்த விஷயம் பிரம்மதேவனை எட்டியது. சினம் கொண்ட  பிரம்மதேவன் நவகிரகங்கிளை அழைத்தார்.



நவகிரகங்களே நீங்கள் தேவர்களானாலும்  எம் கட்டளைப்படி நடக்க வேண்டியவர்களாவீர்கள் தனித்து இயங்கும் சுதந்திரம் அற்றவர்கள். காலதேவனின் துணை கொண்டு ஜீவராசிகளுக்கு வினைப் பயனைகளை அளிப்பதற்காகவே யாம் படைத்தோம். எமது உத்தரவின் பேரில் செயல்பட மட்டுமே  அதிகாரம் கொண்ட நீங்கள் எமக்குக் கீழ்படியாமல் சுதந்திரமானவர்களாகிக்  காலவ முனிவருக்கு த் தொழுநோய் அணுகா வரம் அருளியுள்ளுர்கள். ஆகவே நீங்கள் ஒன்பது பேரும் பூலோகத்தில் பிற வி  கொள்வீர்கள். காலவ முனிவர் தொழுநோயால்  துன்பப்பட வேண்டிய கால  அளவு  வரை அதே தொழுநோயால் துயர் அடைவீர்! என சாபமிட்டார்

தொடரும்... 


No comments: