Wednesday, November 02, 2011

கடவுள் வாழ்த்து -001



1,அகர முதல எழுத்தெல்லாம் -ஆதி 
   பகவன் முதற்றே உலகு.
     அகரம் எழுத்துக்களுக்க்கு முதன்மை,ஆதிபகவன்-உலகில் வாழும்                                                                       உயிர்களுக்கெல்லாம் முதன்மை,,,,,,,,,,


2,கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

  நற்றாள் தொழாஅர் எனின்


    தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?


3,மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

  நிலமிசை நீடுவாழ் வார்



 அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்


4,வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு


  யாண்டும் இடும்பை இல


   விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை


5,இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

  பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு



  கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை


6,பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க


  நெறிநின்றார் நீடுவாழ் வார்


 ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்


7,தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்               
                                                                           -கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது


  தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது


8,அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்


  பிறவாழி நீந்தல் அரிது


அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது


9,கோளில் பொறியில் குணமிலவே 


                                                         - எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை



 கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்


10,பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்


இறைவன் அடிசேரா தார்


இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது




அன்புள்ள நண்பர்களே எல்லோரும் எழுதிய தெளிவுரை இருந்தாலும், ஒவ்வொரு அதிகாரத்திற்கும், எனது டிசைனை  சேர்த்த போகிறேன், எனது டிசைன் பற்றி 

மறக்காம கருத்து சொல்லுங்க நான் வளர,,,,,,,,

9 comments:

VANJOOR said...

அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.


//// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////

.

Unknown said...

வரப்புயர. நீருயர. நெல்லுயர வளருமாறு வாழ்த்துகிறேன்!

இராஜராஜேஸ்வரி said...

வரவேற்பும் வாழ்த்துகளும்...

சென்னை பித்தன் said...

நல்லாருக்கு.
த.ம.1

ராஜா MVS said...

தாங்கள் வடிவமைத்த படம் அருமை நண்பா...

முதலில் தோன்றிய பிரபஞ்சத்தை குறிக்கும் வகையில் ஆகாயத்தை காட்டி... பிறகு இன்றும் மன்னில் உயிரினங்கள் தோன்ற ஆதாரமாக விளங்கக்கூடிய தாவரங்களை குறிக்கும் வகையில் பச்சைநிறத்தை சுட்டிருப்பது மிகவும் அருமையாக உள்ளது... நண்பா...

முதல் குறளுக்கு பொருத்தமாக அமைத்துள்ளீர்கள்...

தாங்கள் இதுபோன்று இன்னும் பல படங்கள் சிறப்பாக வடிவமைக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்...

உலக சினிமா ரசிகன் said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

S.Muruganandam said...

திருக்குறளுக்கு அருமையான தலைப்பு டிசைன்கள்.மேலும் வளர வாழ்த்துகள்.

Sivamjothi said...

Good attitude. Open to all... :)


கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் - valluvar

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)

திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



Please follow

(First 2 mins audio may not be clear... sorry for that)

(First 2 mins audio may not be clear... sorry for that)

http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk

http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo




Online Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

My blog:
http://sagakalvi.blogspot.com/

Subramanian said...

தங்களது இந்த முயற்சி தொடர வாழ்த்துக்கள் நண்பரே! தங்களது பதிவுகள் அருமை. மிக்க நன்றி!