Monday, December 08, 2014

அமைதியும் , ஆனந்தமும் அருளும் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி



1879 ஆம் ஆண்டு டிசம்பர் முப்பதாம் தேதி இரவு மதுரை மாவட்டத்தில் திருச்சுழி கிராமத்தில் சுந்தரம்  அழகம்மையார் தம்பதிக்கு ரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு வேங்கடராமன் என்று பெயரிட்டு வளர்த்தனர்.
வக்கீல் தொழில் செய்து வந்தார் சுந்தரம் . அவருக்கு மூன்று மகன்கள்.கடைக்குட்டியாக ஒரு மகள்.
பள்ளியில் வேங்கட ராமன் ஒரு சாதாரண மாணவன். சிறு வயதிலிருந்தே அவன் உள்ளத்தில் அருணாசலம் என்னும்  வார்த்தை ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த வார்த்தை உள்ளத்தில் ஒலிப்பதன் காரணமும் தெரியவில்லை. அருணாச்சலம் எங்கே இருக்கிறது என்பதும் தெரியவில்லை.
1896 ஆம் ஆண்டுவேங்கட ராமனுக்குப் பதினேழு வயது. பன்னிரண்டாவது வயதிலேயே தந்தையை இழந்து விட்டதால் மதுரையில் சித்தப்பா வீட்டில் தங்கி படிப்பைத் தொடர வேண்டிய சூழ்நிலை.http://www.theguruofyou.com/videolibrary/images/video-thumbs/kOxYJFJb7eM-0.jpg
வீட்டின் மாடியில் தனிமையில் வேங்கடராமன் உட்கார்ந்து இருந்தார்.அப்போது அவர் உள்ளதில் திடீரென்று ஒரு பயம் எழுந்தது.
அய்யோ நான் இறந்துவிடப் போகிறேன் இன்னும் சில நிமிடங்களில்.........
இந்தப் பயம் தோன்றியதும் வேங்கடராமன் மருத்தவரைத் தேடிஓடவில்லை . பெரியவர்கள் யாரிடமும் செல்லவும் இல்லை. தனக்குள் எழுந்த சிக்கலைத் தானே தீர்த்துக் கொள்ள முடிவு செய்தார். சாவு நெருங்கி விட்டது சாவு என்றால் என்ன?
 எது சாகிறது? இந்த உடல்தானே  செத்துப் போகிறது? ன்று கேட்டுக் கொண்டார். மரணத்தை அனுபவித்துப் பார்ப்பது  என்று தீர்மானித்தார். கை கால்களை நீட்டி பிம் போல் படுத்தார்.
உடம்பு செத்துவிட்டது. அப்புறம்? இதை மயானத்திற்குக் கொண்டுபோய் எரித்து விடுவார்கள்.....இது சாம்பலாய்ப் போகும்.
கற்பனையில் உடல் மயானத்திற்குச் சென்றது. எறியூட்டப்பட்டது. சாம்பல் மட்டுமே மிஞ்சியது.அதன்பின்னும் வேங்கடராமன் உள்ளத்தில் கேள்வி எழுந்தது.
உடம்பின்  முடிவுடன் நானும்   இறந்து விட்டேனா  ?இல்லையே உடல் சலனமற்றுக் கிடந்தபோதும் நான் மட்டும் எஞ்சி இருக்கிறேனே........  அதன்சக்தியை ஒளிவடிவமாக உணர முடிகிறதே...நானின் ஒலியும் ஒலிக்கிறதே?
வேங்கடராமனுக்கு உடலில் இருக்கும் நான் சாகவில்லை என்பதை சக்தி சொரூபமாக உணர முடிந்தது . நாத வடிவமாகக் கேட்க முடிந்தது.  அந்த நான் தான் உடலுக்குக் கட்டுப்படாத ஆத்மா என்ற உண்மை அனுபவ பூர்வமாக அவருக்குப் புரிந்தது.அந்த வயதிலேயே ஆத்ம தரிசனம் கண்டு விட்ட வேங்கடராமனால் வீட்டில் இருக்க முடியவில்லை.
அருணாச்சலம் திருவண்ணாமலையில் தான் இருக்கிறது என்பது உறவிர் ஒருவர் மூலம் தெரியவந்தது. படிப்பில் கவனம் செல்லவில்லை ஒரு நாள்வீட்டை விட்டு வெளியேறினார்.  திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். மொட்டை அடித்துக் கொண்டார். வேட்டியைக் கிழித்துக் கோவணமாக்கித் தரித்துக் கொண்டார்.
கோயிலுக்குள் நுழைந்து பாதாள லிங்கம் இருந்த இருட்டுக் குகையில் கோய் அமர்ந்தார். ஆழ்நிலை தியானத்தில் ஆழ்ந்தார். எத்தனை  நாட்கள் அங்கே அமர்ந்திருந்தார் என்பது தெரியவில்லை. வேங்கடராமனின் உடலின் கீழ் பாகம் குகையில் குடியிருந்த பூச்சி, பூச்சிகளால் அரிக்கப்பட்டு,ரத்தமும், சீழுமாக ஆனது.
பாதாள லிங்கக்  குகையில் பால சந்நியாசி ஒருவர் நிஷ்டையில் ஆழ்ந்திருப்பதை சேஷாத்ரி சுவாமிகள் என்னும் சந்நியாசி கண்டறிந்தார்.அவரை மேலே தூக்கி வந்தார். அதன் பின்னரே பால சந்நியாசியைப் பற்றித் தெரியவந்தது.
மகனின் சந்நியாசத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட தாய் அழகம்மாள், மூத்த மகனுடன் வந்துவேங்கட ராமனைப் பார்த்து வீடுதிரும்பச் சொல்லிக்  கதறினார். அவர் மசியவில்லை.
மகன் இனி உலக வாழ்க்கைக்குத் திரும்ப மாட்டான் என்று உணர்ந்து தாய் வருத்தத்துடன் திரும்பினார்.
அண்ணாமலையார் ஆலய மண்டபம், தோப்புகள்  போன்றஇடங்களில் தங்கியிருந்த சுவாமி, அருணாசலத்தின் மீதேறி விரூபாக்ஷி குகை என்னும் ஒரு குகையில் தங்கினார்.
அங்கே ஒருநாள் , வேலூரில் பள்ளி ஆசிரியராக இருந்த கணபதி முனிவர் என்பவர் சுவாமியிடம் வந்து உபதேசம் பெற்றார்.அவர்தான் சுவாமியை ஸ்ரீ ரமண மகரிக்ஷி என்று அழைத்தவர்.
விரூபாக்ஷி குகையில் இடம் போதாத சூழ்நிலை! மகரிக்ஷி இடத்தை மாற்ற முடிவு செய்தார். மலை மேல் ஏறிச் சென்றார்.
அங்கே ஓரிடத்தில் பாறைகளின் இடுக்கில் கனையொன்றின் ஊற்றுக் கண்ணிலிருந்து நீர் வற்றாமல் நீர் வந்து கொண்டிருப்பதைக் கண்டார். அதுதான் சரியான இடம் என்று பகவான் தீர்மானித்தார். கந்தசாமி என்னும் பக்தரின் உதவியோடுமுட்புதர்களை அகற்றி ,கல் வீடு ஒன்றை எழுப்பினார். கந்தசாமியின் முயற்சியால் எழுந்த ஆசிரமம் என்பதால் கந்தாசிரமம் என்றே அழைக்கப்படலாயிற்று.
1907 ஆம் ஆண்டு மகரிக்ஷியின் அன்னையும் ஊரிலிருந்துபுறப்பட்டு வந்து அவருடைனேயே தங்கி விட்டார். ஆசிரமவாசிகளுக்கும் வந்து போவோருக்கும் அன்னை அழகம்மாள் சமைக்கலானார்.
1920 ஆம் ஆண்டு அழகம்மாளின் டல்நலம் குன்றி, நோய்வாய்ப்பட்டு படுத்தார். ரமண மகரிக்ஷி அன்னையின் கூடவே இருந்து கவனித்துக் கொண்டார். 1922 மே மாதம் பத்தொன்பதாம் தேதி இரவு எட்டு மணிக்கு அன்னையின் உயிர் பிரிந்தது. அன்னையின் உடல்  மலையடிவாரத்தில் ஒரு குழியில் இடப்பட்டது. ஒரு சமாதி எழுப்பப் பட்டது. சமாதி மேடை மேல் லிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ரமண மகரிக்ஷி கந்தாசிரமத்தை விட்டு வந்து அன்னையின் சமாதிக்கருகில் ஒரு கீற்றுக் கொட்டகையில் தங்கினார். அதுவே பின்னாளில் ரமண மகரிஷியின் ஆசிரமமானது.
மகரிஷி காலை நான்கு மணிக்கே எழுந்து விடுவார்.வேத பாராயணம் தொடங்கும். அனைவரும் வேத பாராயணத்தைக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
1949 ஆம் ஆண்டு அன்னையின் சமாதி மேடையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த மாத்ருபூதேஷ்வர்ரை மையமாக வைத்து ஒரு கோயில் எழுப்பப்பட்டது. அதன் கும்பாபிஷேக விழாவில் மகரிஷி கலந்து கொண்டார்.அப்போதுஅவருக்கு வயது70
கந்தாசிரமத்தில் இருந்த காலத்திலேயே மகரிஷி கிரிவலம் செய்வது வழக்கம். ஆசிரமம் அமைந்த பின்னும் அது தொடர்ந்தது.
அதன் பின் மகரிஷியின் இடது முழங்கை மூட்டுக்கு கீழே ஒரு புற்றுநோய்க் கட்டி புறப்பட்டது. றுவை சிகிச்சை செய்து அகற்றியும்  அது வளர்ந்த வண்ணம் இருந்த்து. கதிர் இயக்க சிகிச்சைக்கும் , கட்டுப்படவில்லை. மூலிகை சிகிச்சைக்கும் முடங்கவில்லை.
1980 ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக் கிழமை இரவு 8 மணி 47 நிமிடம்…….  பகவான்  ரமணர் இயக்கத்தை நிறுத்திக் கொண்டார்.
அந்த நேரத்தில் ஒரு எரிநட்சத்திரம் தோன்றி வான்வெளியில் குறுக்கே ஜோதியுடன் நகர்ந்து மறைந்தது.
அன்னையின் ஆலையத்தை அடுத்து பழைய கூடத்துக்கும் புதிய கூடத்துக்கும் இடையில் ஒரு குழிவெட்டி அதனுள் அவரது உடல் சமாதியாக வைக்கப்பட்டது . சமாதி மீது  பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமே  இனி ஒரு பகவானின் வெளிமுக உருவம் அன்பர்களின் இதயத்தில் பதிந்துவிட்ட அவரது திருவடிச் சுவடுகளே உள்முகம்.http://4.bp.blogspot.com/_0HNcQMg0Zm4/TKDBW5QLbFI/AAAAAAAAA4E/h6bELGYAcHs/s320/DSC_3508.JPG
சென்னையிலிருந்து 200கி,மீ தூரத்தில் இருக்கிறது. திருவண்ணாமலை இங்கிருக்கும் குன்றின் பெயர் அருணாசலம். ஆண்டவனே அசலமாக அமைந்திருப்தாக மகரிஷி அடையாம் காட்டிய குன்று இது.
இதன் தென் புற அடிவாரத்தில் ரமணாஷ்ரமம் அமைந்திருக்கிது. விசாலமான நிழலான  திறந்த வெளி அதையடுத்து அன்னையின் நினைவாக எழுப்பப்பட்ட ஆலயம்.
இதனையடுத்து ஒரு பெரிய மண்டபம் அங்கே பகவானின் சமாதி மேடை .மேடை மீது ரமணமகரிஷி தியானநிலையில் சிலையாக வடிக்கப்பட்டிருக்கிறார்.
ஜீவன் உறையும் பகவானே  அங்கு அமர்ந்திருப்பது போல் உள்ளுக்குள் ஓர் சிலிர்ப்பு  ஊடுறுவுகிறது . மனம் கல்வியை வேண்டுகிறது. பதவியைத் தேடுகிறது. பணத்தை நாடுகிறது, குடும்ப சுகத்திற்கு அழைகிறது  இவற்றை அடைய எங்கெங்கோ ஓடுகிறது.
எதனையோ தேடிய மனம் அமைதியைத் தேடியிருந்தால் இந்த அல்லாட்டம் இருந்திருக்காது. அமைதியை எங்கே தேடுவது. ரமணாஷ்ரமத்திற்கு வருகை தாருங்கள் எங்கெங்கோ தேடினோம் கிடைக்காத மனஅமைதி அங்கே கிடைப்பதை உணர முடியும் . குரங்காட்டம் போட்ட மனம் அடங்கி ஆனந்த அமுதக்கடலில் ஒரு துளியை ருசித்துப் பார்க்கும் . ஆசிரமத்தில் தங்க விருப்பமானவர்கள் முன் கூட்டியே ஆசிரமத்திற்கு எழுதி முறையாகப் பதிவு செய்ய வேண்டும். செய்துகொண்டால் ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம்.ஆசிரமத்திலேயே உணவும் வழங்கப்படும்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி ஸ்ரீரமணாஷிரமம்
 ,திருவண்ணாமலை, தமிழ்நாடு- 606 603
தொலைபேசி : 91-4175 237292 / 237200
Email: ashram@ramana-maharishi.org

திருத்தலக் குறிப்புகள்

அவதாரப்புருஷர் அடக்கமான  தலத்தின் பெயர் :

திருவண்ணாமலை

அவதாரப்புருஷரின் திருநாமம் :

ஸ்ரீரமண மகரிஷி

எங்கே உள்ளது?   சென்னையிலிருந்து-200கி.மீ தூரத்தில்.

எப்படிப் போவது?

சென்னையிலிருந்தும், கோவையிலிருந்தும் திருவண்ணாமலைக்குப் பேருந்து மற்றும் கார் மூலம் செல்லலாம்

எங்கே தங்குவது?

திருவண்ணாமலையில் நிறைய தங்கும் விடுதிகளும், உணவுவிடுதிகளும் உள்ளன.

தரிசன நேரம்

காலை 5 மணி முதல்    இரவு 8.30 மணி வரை.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பை அறிந்து மகிழ்ந்தேன்...