Sunday, September 06, 2015

பட்டுப்புடவை வாங்குவதற்கான குறிப்புகள்:

உடல் அமைப்பிற்கு ஏற்றாற்போல் பட்டுபுடவைகள் வாங்கவேண்டும். பார்ப்பதற்கு ஆடம்பரமாய் இருப்பதைக்காட்டிலும் உடல் அமைப்பிற்கு ஏற்றாற்போல் தேர்வு செய்வதே புடவையை இன்னும் எடுப்பாய் காட்டும்.

உடலமைப்பு சற்று பருமனாக இருப்பவர்கள், மென்பட்டு, கோரா பட்டு, திசு பட்டு ஆகிய வகைகளை தவிர்ப்பது நல்லது. அது உடலை மேலும் வெளிப்படுத்தும்படியாக இருக்காது. அவர்களுக்கு மிருதுவான சிபான், கிரேப் போன்ற ரகங்கள் பொருத்தமாக இருக்கும்.

உடலமைப்பிற்கு ஏற்றாற்போல் பட்டுப்புடவை வாங்குவதற்கான குறிப்புகள் :

    பருமனான உடலுடைய பெண்கள் ஜார்ஜெட், சிபான் (அ) சிக்னான் ஆகிய ரகங்களை தேர்வு செய்தல் வேண்டும். கனமான மைசூர் பட்டு புடவை ரகங்கள் அவர்களை சற்று ஒல்லியாக காட்டும்.
    மெல்லிய பெண்கள் Organza, பருத்தி, திசு மற்றும் டசர் ரக புடவைகள் வாங்கிக்கொள்ள வேண்டும். இந்த புடவைகள் ஒரு முழுமையான தோற்றத்தை அளிக்கின்றன. இந்த துணிகள் ஒல்லியான பெண்களுக்கு மிக அதிக ரகங்களை வைத்துள்ளது.
    உயரம் குறைவான பெண்கள், சன்னமான பார்டர் அல்லது பார்டரே இல்லாத புடவைகளை வாங்க வேண்டும். பெரிய பார்டர் புடைவைகளை அவர்கள்  கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் அத்தகைய பெரிய பார்டர் புடவைகள் அவர்களை இன்னும் குள்ளமாக காட்டும்.
    உயரமான பெண்கள் பெரிய பார்டர் உள்ள புடவைகளை வாங்கவேண்டும்.
    அடர் மாநிற பெண்கள் எப்போதும் கருஞ்சிவப்பு, பச்சை, அடர்த்தியான பிங்க் போன்ற நிற புடவைகளையே தேர்வு செய்ய வேண்டும்.


புடவை அணிவதற்கான குறிப்புகள்:
முதல் நிலை :

    ஒன்று உள்பாவாடை. இது இடுப்பிலிருந்து பாதம் வரை இருக்கும் ஒரு ஆடை. ஒரு நாடாவினால் இடுப்போடு இறுக்கப்பட்டு இருக்கும். இந்த ஆடை புடவையின் அடிப்படை நிறத்திற்கு மிக நெருக்கமாக இருக்கவேண்டும். இது அணிந்தபிறகு எந்த இடத்திலும் வெளியே தெரியாதவாறு இருக்கவேண்டும்.
    ப்ளவுஸ் : இது சரியான அளவில், புடவையின் நிறத்தை ஒத்திருக்க வேண்டும். இது ஸ்லீவ் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஆக இருக்கலாம். மார்பு பகுதியின் கீழே முடிவடையுமாறு இருக்கவேண்டும்.


இரண்டாம் நிலை :

    புடவை அணியும்போது மேல் பகுதியை தொப்புளின் அருகே உள்பாவடையின் மேல்புறத்தில் சொருகவேண்டும். மொத்த புடவையும் இடது கைப்புறமாக வருமாறு பார்த்துக்கொண்டு, புடவை தரையை தொடுமாறு அணியவேண்டும். இப்பொழுது புடவையை உங்களைச்சுற்றி ஒரு சுற்று சுற்றி, வலதுபுறத்தில் உங்களின் முன்பகுதிக்கு வருமாறு அணியவேண்டும்.


மூன்றாம் நிலை :

    தோராயமாக 5  அங்குல அளவில், 5  முதல் 7  மடிப்புகளை சொருகியுள்ள பகுதி வரை மடிக்கவும். மடிப்புகளை சரியாக பிடித்து சேர்த்து கீழேவரை மடிப்பு சரியாக உள்ளதா என பார்த்து சரி செய்யவும். ஒரு சேப்டி பின்னை வைத்து மடிப்பு கலையாமல் பார்த்துக்கொள்ளலாம்.


நான்காம் நிலை :

    மடிப்புகளை சரியாக பிடித்து தொப்புளின் இடது ஓரமாக உள்பாவடையில் சொருகவும்.


ஐந்தாம் நிலை :

    மீதமுள்ள புடவையை இன்னொருமுறை இடத்திலிருந்து வலமாக  உங்களைச்சுற்றி கொண்டுவந்து, உங்கள் இடுப்பின் முன்பகுதிக்கு கொண்டுவந்து புடவையின் மேல் பார்டர் பகுதியை கையில் பிடிக்கவும்.


ஆறாம் நிலை :

    மீதமுள்ள புடவையின் பகுதியை சிறிது உயர்த்தி உங்கள் பின்பகுதியில் கொண்டுவந்து வலது கையின் கீழே கொண்டு வந்து உடலின் குறுக்காக கொண்டுசென்று  இடது கையின் மேலே போடவும். இப்போது புடவையின் மீதி பகுதி உங்கள் முழங்கால்களின் அளவிற்கு வந்து விழுந்திருக்கும்.

    இடது தோள்பட்டையிலிருந்து இறங்கியிருக்கும் புடவையின் பகுதியை பல்லவ் அல்லது பல்லு என்பார்கள். அந்த பகுதி தோள் பட்டையிலிருந்து சரிந்து வராமல் இருக்க தோள்பட்டையின் ப்ளவுஸ் உடன் இணைத்து சேப்டி பின் அணிந்துகொள்ளலாம்.


புடவை பாதுகாப்பு / பராமரிப்பு / சலவை குறிப்புகள்

சலவை

    முதல் சலவையின்போது, பட்டுப்புடவையை உப்புத்தண்ணீரில் ஊறவைத்து, குளிர்ந்த தண்ணீரில் அலச வேண்டும். துவக்கத்தில் சோப்பு பயன்படுத்தவேண்டாம். இரண்டு அல்லது மூன்று முறை வெறும் தண்ணீரில் மட்டும் சலவை செய்யவும்.
    அதற்குபிறகு, மிதமான சோப்புத்தூள் பயன்படுத்தி விரைவாக அலசிவிடவும்.
    துவக்கத்தில் முந்தி மற்றும் பார்டர் பகுதிகளை தனித்தனியாக துவைக்கவேண்டும்.
    பிற ரசாயனங்களை சலவைக்கு பயன்படுத்த வேண்டாம். அது புடவையின் ஆயுளைக்குறைக்கும்.
    பிரஷ் கொண்டு துவைப்பதோ, அடித்து துவைப்பதோ வேண்டாம். அது ஜரிகையினை சேதப்படுத்தும்.
    பட்டுபுடவையினை பிழிவதோ, முறுக்கி துவைப்பதோ வேண்டாம்.
    ஈரத்துடன் நீண்ட நேரம் சுருட்டி வைத்திருக்காதீர்கள்.


உலர்த்துதல்

    சலவை முடிந்த உடனேயே புடவை உலர்த்தப்பட வேண்டும்.
    முதலில், ஒரு உலர்ந்த துண்டால் புடவையினை சுற்றி அதன் ஈரப்பதத்தை குறைக்க வேண்டும்.
    அதன்பிறகு, ஹேங்கரில் மாட்டி உலர்த்தவும்.
    நேரடியான சூரிய வெப்பத்தில் உலர்த்தவேண்டாம்.


உலர் சலவை

    உலர் சலவையில், திரவங்களைக்கொண்டே பட்டுபுடவையில் உண்டான கரைகளை நீக்குகிறார்கள்.
    திரவங்களில் தண்ணீரின் அளவு மிகவும் குறைவாகவோ, தண்ணீரே இல்லாமலோதான் இருக்கும். ஆகையால் அவை தண்ணீரைப்போல பாட்டின் இழைகளுக்குள் ஊடுருவாது.
    பட்டினை பராமரிப்பதற்கு உலர் சலவைதான் மிகச்சிறந்த வழி.
    உலர்சலவைக்கு கொடுக்கும்முன் கவனிக்கவேண்டியவை :
        கரை படிந்த ஆடைகளை உடனடியாக சலவைக்கு கொடுக்க வேண்டும்.
        எப்படி கரையானது என்று தெளிவாக கூறவும்.
        கண்ணுக்கு தெரியாத கரைகளையும் சுட்டிக்காட்டவும்.
        பளபளப்பு குறைந்த, நிறமிழந்த இடங்களை சரியாக சுட்டிக்காட்டினால், சலவையாளர் அதனை சரி செய்ய இயலும்.


இஸ்திரி

    இஸ்திரியை வைத்து அழுத்தும்போது மிதமான சூட்டில் வைக்கவும்.
    275 க்கு குறைவான வெப்பம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். ஈரப்பதமுள்ள அல்லது நீராவி இஸ்திரி கொண்டே இஸ்திரி செய்யவும்.
    கஞ்சி இடப்பட்ட ஆடைகளுக்கு தனிக்கவனம் எடுக்கவும்.


மடித்து வைத்தல்

    புடவையை எப்போதும் குளிர்ந்த உலர்ந்த இடத்தில்தான் வைக்கவேண்டும்.
    ஜரிகை உடைவதை தவிர்க்க, புடவையின் மடிப்பை மாதம் ஒருமுறையேனும் மாற்றி வைக்கவும்.
    அனைத்து பட்டு ஆடைகளும் மெல்லிய துணிகளில் சுற்றி வைக்கலாம்.
    எம்ப்ராய்ட்ரி ஆடைகளை மடித்து வைக்கும்போது, ஆடைகளுக்குள் உராய்வு குறைவாக இருக்குமாறு பார்த்து மடித்து வைக்கவும்.
    பட்டு ஆடைகளை மாட்டி வைப்பதே பராமரிப்பதற்கு சிறந்த வழி.
    சுருக்கமடையாத ஆடை ரகங்களை நுட்பமாக கையாள வேண்டும்.


பட்டு புடவைகளை பராமரித்தல்

உலர் சலவையே சிறந்தது:
பொதுவாக பாட்டு புடவைகளை உலர்சலவைதான் செய்யவேண்டும். கைகளால் சலவை செய்யும்போது பட்டின் நிலைத்தன்மை மாறி, நிறமிழந்து பளபளப்பு குறையலாம். க்ளோரின் சலவை செய்வது பட்டினை சேதப்படுத்தி மங்கிட  செய்துவிடும்.

பட்டினை சலவை செய்தல்:
ஆடைகளுக்கு தகுந்தாற்போல சலவைக்குறிப்புகளை கையாள வேண்டும். ரா சில்க், சீனா பட்டு, இந்திய பட்டு, கிரேப், பொங்கி, ஷாண்டங், டஸார், டூபியான் மற்றும் ஜக்கார்டு புடவைகளை சலவை செய்வது சுலபம். சலவை முடிந்த உடனேயே புடவை உலர்த்தப்பட வேண்டும். முதலில், ஒரு உலர்ந்த துண்டால் புடவையினை சுற்றி அதன் ஈரப்பதத்தை குறைக்க வேண்டும். அதன்பிறகு, ஹேங்கரில் மாட்டி உலர்த்தவும்.

கரைகளை களைவது:

    புரதக்கறை:
    இவை முட்டை, மாமிசம், ரத்தம், வாசனை திரவியங்கள், பழச்சாறுகள், வேர்வை போன்ற கறை வகைகளை உள்ளடக்குகின்றன. இதுபோன்ற கரைகளை அகற்ற, முதலில் சோப்பினை உபயோகிக்க வேண்டும். பிறகு, குளிர்ந்த நீரில் ஊறவைத்து சலவைக்கு போட வேண்டும். இன்னும் கடுமையான கறைகள் எனில், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் NH2 ஒரு சில துளிகள் கலந்து கறையான இடத்தில் தேய்க்கவேண்டும்.
    கலவையான கறைகள் :
    இவை சாக்லேட், குழம்பு, ஐஸ் க்ரீம், பால் உள்ளிட்ட கரைகளாகும். முதலில் ஒரு உலர்சலவை கரைப்பான் பயன்படுத்தி உலர்த்த வேண்டும். கறை படிந்த பகுதியினை திரவ சோப்பு கொண்டு கழுவி சலவை செய்யலாம். கறை நீக்கியினை பயன்படுத்தியபிறகு, பட்டாடையினை வெந்நீரில் சலவை செய்ய வேண்டும்.
    நெயில் பாலிஷ் கறை :
    நெயில் பாலிஷ் கறை படிந்த இடத்தில் அசிட்டோன் கொண்டு தேய்த்தால் கறை நீங்கும்.
    உதட்டுச்சாய கறைகள் :
    முதலில் உலர்சலவை திரவங்களும் பிறகு, சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு சலவை செய்தால் உதட்டுச்சாய கரைகளை நீக்கலாம்.
    கிரீஸ் கறைகள் :
    இவை பெரும்பாலும் எண்ணெய், வெண்ணெய், மார்கரின், கிரேயான் பென்சில் கறைகள், மருந்துகள், எண்ணெய் போன்ற ஒப்பனை பொருட்கள் ஆகியவற்றால் ஏற்படுகிறது. சோப்புக்கட்டி வைத்து அடித்து துவைப்பது கரையினை மேலும் அடர்த்தியாக்கும். சோப்பு பயன்படுத்தி கறைபடிந்த இடத்தில் தேய்த்த பிறகு, வெந்நீரில் சலவை செய்யவும்.


ஆடைகளின் வண்ணங்களை சரியாக பராமரிக்கவும் :

    பட்டடைகளுக்கு:
    பட்டாடைகள் உலர் சலவை மட்டுமே செய்யப்படவேண்டும். வீடு சலவை தவிர்க்கவும்.
    பாதுகாப்பு குறித்த லேபிளை படிக்கவும் :
    ஒரு சில வினாடிகள் செலவழித்து பாதுகாப்பு குறித்த லேபிளை படிப்பது, சலவை செய்து முடித்த பிறகு வரும் ஏமாற்றங்களை தவிர்க்க உதவும். குளிர்நீரில் மட்டுமே சலவை செய்யக்கூறும் குறிப்புகளை கவனமாக படிக்கவும். உலர்துவதைப்பற்றி உள்ள குறிப்புகளையும் படிக்க தவறாதீர்கள். அந்த ஆடைகள்  எப்படிப்பட்ட நிலையில் உலர்தப்படவேண்டுமென்று அந்த குறிப்புகளில் உணர்த்தப்பட்டு இருக்கலாம்.
    அடர்நிற ஆடைகளை ஒன்றாக சலவை செய்யவும் :
    ஆடைகளை வரிசைப்படுத்துவது, பாதுகாப்பு குறிப்பை கவனிக்கவும், சலவை முறை கண்டறிந்து வகைப்படுத்தவும் உதவியாக இருக்கும். வெண்ணிற ஆடைகளுக்கு மத்தியில் ஒரே ஒரு அடர்நிற ஆடையினை துவைத்த பலருக்கு இந்த நிறம் மங்கும் விஷயம் புரிந்திருக்கும். நிறமிழப்பதை தவிர்க்க, ஆடைகளை நிறவரிசைப்படுத்துங்கள்.
    ஆடைகளை உள்வெளியாக மாற்றி சலவை செய்யுங்கள் :
    சலவை செய்யும்போதும், உலர்த்தும்போதும் ஆடைகளை உள்வெளியாக மாற்றினால், ஆடையில் ஏற்படும்  கிழிசல்களை தவிர்க்க உதவும். ஆடைகளை வெளிப்புறம் சலவை செய்வதும் உலர்த்துவதும் கடுமையாக இருக்கலாம். இது ஆடைகள் மங்கிப்போவதையும் குறைக்கும். குறிப்பாக ஆடைகளை உலர்த்தும்போது, இதனை பின்பற்ற மறக்காதீர்கள். ஏனெனில் சூரியன் ஒரு மிகச்சிறந்த உலர்த்தும் கருவி. அது உங்கள் ஆடைகளின் நிறத்தினை மங்கிடச்செய்யும்.
    சலவை இயந்திரத்தில் ஆடைகளை துணிக்க வேண்டாம் :
    சலவை இயந்திரத்தில் ஆடைகளை ஒன்றாக திணிப்பது வேலையை குறைக்கும் என்பதால் இதனை பெரும்பாலும் அனைவரும் பின்பற்றுவர். அது வேலையை குறைக்குமே தவிர, இயந்திரத்தை கடுமையாக இயக்க வைத்து நமது ஆடைகளை சேதப்படுத்தும். மேலும் இது ஆடைகளை முழுமையாக சுத்தப்படுத்தாமலும், சோப்பினை ஆங்காங்கே தங்கிடச் செய்யும். இதைப்போலவே ஆடைகளை திணிப்பது  இயந்திரத்தின் உலர்த்தும் பகுதியிலும் உலர்த்துவதற்கு நீண்டநேரம் எடுத்துக்கொள்ளும். சலவை இயந்திரத்தினுள் ஆடைகள் இலகுவாக இயங்க விடவேண்டும்.
    குளிர்நீரில் சலவை செய்யவேண்டும் :
    இது பலரின் இல்லங்களில் எழுதப்படாத நியதியாக உள்ளது. நிறங்களுடைய ஆடைகளை நிரமிழக்காமல் பாதுகாத்திட குளிர்நீரில்தான் சலவை செய்யப்படவேண்டும். பல காலங்களாக டிடர்ஜென்டுகள் மூலம் சலவை சியும் முறையானது குளிர்நீரில்தான் பின்பற்றப்பட்டு வருகின்றது.
    அளவுக்கதிகமாக உலர்த்துவது வேண்டாம் :
    நாம் அதிகமான நேரம் உலர்த்துவதை சாதரணமாக செய்துவிடுகிறோம். இது நம் அடர்நிற மற்றும் நல்ல நிறமுள்ள ஆடைகளுக்கு நல்லதல்ல. அளவுக்கதிகமாக உலர்த்துவது நிறங்களை மங்கிடச் செய்யும். சலவை இயந்திரத்தில் உலர்த்தும்போது உலர்த்தும் நேரத்தை சரியாக பின்பற்றுங்கள். இயந்திரத்திலிருந்து உலர்த்தி எடுக்கும்போது சற்றே ஈரமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
    வினிகர் சேர்க்கவும் :
    வினிகருக்கு இனிமையான மணம் இல்லையென்றாலும் சலவையில் ஒரு கப் வினிகர் சேர்த்துவது, ஆடைகளை இயற்கையான முறையில் மிருதுவாக வைக்கவும், நிறமிழக்காமல் இருக்கவும் உதவுகிறது. வினிகரின் மணம் சலவியின்போது நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
    இயந்திரத்தில் மிதமான சுழற்சி / மிதமான டிடர்ஜென்ட் பயன்படுத்தவும் :
    உங்களின் தனித்துவமான ஆடைகளை நன்றாக பராமரிக்க எப்பொழுதும் சலவை இயந்திரத்தில் மிதமான வேகத்தில் இயக்கவும், கைகளால் சலவை செய்வதையும் பின்பற்றுங்கள். நிறைய டிடர்ஜெண்டுகள் நிறங்களை மங்கிடாமல் பாதுகாத்து சலவை செய்வதற்கென்றே இருக்கின்றன.

No comments: