Tuesday, September 10, 2013

3, மெய்பொருள் நாயனார்




           மெய்பொருள் நாயனார் திருக்கோவிலூர் என்று இப்போது அழைக்கப்படும் திருக்கோவலூரில் மலாடர் குடியில் வந்த ஒரு குருநில மன்னர், இவர் சிவச்சின்னத்தையே மெய்பொருள் என்று கருதியதால். இவரை மக்கள் மெய்பொருள் நாயனார்  என அழைத்தனர், முத்தநாதன் என்ற எதிரி நாட்டு மன்னன், மெய்பொருள் நாயனார் நாட்டின் மீது பலமுறை போர் தொடுத்தும் இவரை வெல்ல முடியாது, வஞ்சகமாக பகை முடிக்க காத்திருந்தான். ஒருமுறை சிவனடியார்

வேடமேற்று உபதேசமளிப்பதாக கூறி மெய்பொருள் நாயனார் அரண்மனைக்குள் புகுந்தான், மன்னரை (மெய்பொருள் நாயனார் ) மறைத்து வைத்திருந்த தனது தனது வாளாள் வெட்டினான், இது கண்ட அரசனின் மெய்காப்பாளன் தத்தன், முத்தநாதனை கொல்லப்பாய்ந்தான் அவனை தன் உயிர் பிரியும்  தருவாயிலும் தடுத்து நிறுத்திய மெய்பொருள் நாயனார், முத்தனாதன் வஞ்சனையோடு வந்திருந்தாலும் சிவனடியார் வேடமேற்று வாந்த்தினால் அவரை மன்னித்து அனுப்ப ஆணையிட்டு மெய்பொருள் நாயனார்  சிவனருள் பெற்றார்

 மெய்பொருள் நாயனார் பற்றி விரிவாக படிக்க சொடுக்கவும்
மெய்ப்பொருள் நாயனார்

No comments: