Monday, March 07, 2016

பஞ்ச சிவராத்திரிகள்!

வி.ராம்ஜி
மாதந்தோறும் வருகிற சிவராத்திரி விசேஷம். மாசி மகா சிவராத்திரி புண்ணியம் நிறைந்த பலன்களை வழங்கக் கூடிய மகத்துவம் வாய்ந்தது!
இன்னும் சில சிவராத்திரிகள் உண்டு.
நித்ய சிவராத்திரி :  பன்னிரண்டு மாதங்களில் வரும் தேய்பிறை, வளர்பிறைச் சதுர்த்தசி நாட்கள் அனைத்தும் நித்ய சிவராத்திரி. என்று அழைக்கப்படுகிறது.
மாத சிவராத்திரி : மாதந்தோறும் தேய்பிறைச் சதுர்த்தசி நாளே  மாத சிவராத்திரி எனப்படுகிறது.
பட்ச சிவராத்திரி : தை மாதத்தில், தேய்பிறை பிரதமை முதல் 13 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து சிவபூஜை செய்தல் பட்ச சிவராத்திரி என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
யோக சிவராத்திரி: சோம வாரமும் அதாவது திங்கட்கிழமையும் அமாவாசையும் அறுபது நாழிகை இருந்தால், அன்றைய தினம் யோக சிவராத்திரி எனப்படுகிறது.
இந்த ஐந்து சிவராத்திரிகளிலும் விரதம் மேற்கொண்டால், அடுத்த பிறவி இல்லை என்கிறது புராணம்.
அனைத்து விரதமும் மேற்கொள்ள முடியாதவர்கள், மகா சிவராத்திரி நாளில் விரதம் இருப்பதும் விடிய விடிய சிவ தரிசனம் செய்வதும் முக்தியைத் தந்தருளும் என்பது உறுதி!
MyTemple - Daily stories and updates on Whatsapp! Save our number 7022638881 as MyTemple and send "Hi" on Whatsapp for a free subscription in தமிழ். www.mytempleapp.com

No comments: